நாக்குல பர்மனென்ட் சீட் போட்ட சனி ! தமிழகத்தில் பாஜக 15 இடங்களை அசால்ட்டா ஜெயிச்சிருக்கலாமே! போச்சே!
சென்னை: தமிழக லோக்சபா தேர்தலில் 15 இடங்களில் பாஜக அசால்ட்டாக வென்றிருக்கலாம். ஆனால் அவற்றை தவறவிட்டதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழகம், புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடந்த நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் காலை முதலே கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, விருதுநகர், கோவை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, ஆரணி, தருமபுரி, தென்காசி, விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இடங்களில் திமுக-வை விட பாஜக கூட்டணி கட்சிகளின் வாக்குகள் அதிகமாக இருந்தது.
இதே போன்று தென் சென்னையில் திமுக, பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் கூட்டணிக்கு வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட சமமாக இருந்தது. இத்தனை நெக் டூ நெக் போட்டி இருந்தது. இப்படியாக 15 தொகுதிகளை பாஜக அசால்ட்டாக வென்றிருக்கலாம். ஆனால் பாஜகவோ கோட்டை விட்டுவிட்டது.
இதற்கு முக்கிய காரணமாக அதிமுகவுடனான கூட்டணியிலிருந்து பாஜக வெளியேறியது என்கிறார்கள். அதிமுகவுடனான கூட்டணி முறிய காரணம் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதிமுகவில் தெய்வங்களாக பார்க்கப்படும் அண்ணா குறித்தும் எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்தும் பாஜக தலைவர்கள் விமர்சித்திருந்தனர். அதிலும் குறிப்பாக அண்ணாமலையே ஒரு இன்டர்வியூவில் ஜெயலலிதா சிறைக்கு சென்று வந்ததை குறிப்பிட்டு அவர் ஊழல்வாதி என பொருள்படும்படியாக பேசியிருந்தார்.
இது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. அது போல் எப்போது எந்த பாஜக நிர்வாகி பேட்டி கொடுத்தாலும் தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சி பாஜகதான் என கூறி வந்தனர். இத்தனைக்கும் பாஜகவுக்கு வெறும் எம்எல்ஏக்கள்தான் உள்ளனர். இதெல்லாம் அதிமுகவுக்கு எரிச்சலை கிளப்பியது.
ஒரு முறை அதிமுகவுக்கு திமுகவை எதிர்க்க ஆண்மையில்லை என நயினார் நாகேந்திரன் விமர்சித்திருந்தார். அவ்வப்போது சிறிய சிறிய மோதல் போக்கை வைத்து கூட்டணி உடையுமா என்ற பேச்சு எழுந்தது. இதையடுத்து ஒரு கட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகுகிறோம் என அதிமுக அறிவித்துவிட்டது.
ஒரு வேளை அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 15 தொகுதிகளில் அசால்ட்டாக பாஜக வென்றிருக்கலாம். ஆனால் இந்த நல்ல வாய்ப்பை நழுவவிட்டுவிட்டது. அதிமுகவும் சரியான முறையில் வாக்குகளை பெறாவிட்டாலும் கூட்டணி என்ற அடிப்படையில் பாஜகவுக்கு வலுவான இடங்களில் அதிமுக போட்டியிட்டு வாக்குகளை பிரித்த சம்பவமாவது நேராமல் இருந்திருக்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications