கோலமா? அலங்கோலம் செய்த பாஜக மகளிர் அணி! வாஜ்பாய் உருவத்தை வைத்து சரமாரி சம்பவம்!
சென்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு "நாங்கதான் செய்வோம்" என களமிறங்கி சம்பவம் செய்துள்ளது தமிழக பாஜக மகளிரணி. வாஜ்பாய் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவத்தை கோலமாக வரைய முயன்று, அடையாளம் தெரியாமல் அலங்கோலம் ஆக்கியுள்ளனர் பாஜக மகளிர் அணியினர்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி வாஜ்பாயின் நூறாவது பிறந்தநாளையொட்டி இந்த ஆண்டு முழுவதும் வாஜ்பாயின் நூற்றாண்டு விழா பாஜகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் இன்று வாஜ்பாய் நூற்றாண்டு விழாவையொட்டி பாஜகவினர் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அந்தவகையில் தமிழ்நாடு பாஜக மகளிரணி செய்த சம்பவம் தான் சமூக வலைதளங்களில் 'டாக் ஆஃப் தி டவுன்' ஆகி இருக்கிறது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில், பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் சென்னை கோட்ட மகளிர் அணி சார்பாக 2,000 அகல் விளக்குகள் ஏற்றி இன்று புகழஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் தான், வாஜ்பாய் உருவத்தை கோலமாக வரைந்திருந்தனர் பாஜக மகளிர் அணியினர். அந்தக் கோலத்தில் அகல் விளக்குகளை வைத்து தீபம் ஏற்றி இருந்தனர். அந்தக் கோலம் தான் சமூக வலைதளங்களில் கடுமையான கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.
இந்தக் கோலம் அலங்கோலமாக இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர். "வாஜ்பாய் வரைய சொன்னா முதல்வன் படத்துல வர்ற கிராபிக்ஸ் பாம்ப வரஞ்சு வெச்சிருக்காங்க கமலாலய மகளிரணி" என நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
பாஜக நடத்தும் போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் பலமுறை காமெடி ஆகியுள்ளன. ஆனால், 'இதுமாதிரி நெறைய நடந்திருக்கு.. ஆனா இதுதான் ஃபர்ஸ்ட் டைம்" என்பதுபோல, கோலம் மூலமும் சரமாரி சம்பவம் செய்து கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது பாஜக மகளிர் அணி.
-
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்











Click it and Unblock the Notifications