தமிழக பட்ஜெட் 2022-23 நாளை தாக்கல்.. தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகள் என்ன?
சென்னை: தமிழகத்தில் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான முழு நிதி நிலை அறிக்கையானது நாளை தாக்கலாகிறது. இந்த நிலையில் தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் நாளை தாக்கலாகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் உலகையே புரட்டி போட்ட கொரோனா பெருந்தொற்றால் தொழில்துறை, சினிமா துறை, சுற்றுலா துறை என பல துறைகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
அந்த வகையில் தமிழகத்தில் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்வளம் அதிகமாக உள்ள மாவட்டங்களில் ஒன்றான கோவை மாவட்டத்தில் முடங்கிய தொழில்களை மீட்டு கொண்டு வர தாட்கோ வங்கிகள் மூலம் எளிய முறையில் கடன் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பம்புசெட்டுகள்
அது போல் பம்புசெட்டுகள் தயாரிப்பில் 55 சதவீத பம்பு செட்டுகள் கோவையில் மட்டுத்தில்தான் தயாரிக்கப்படுகின்றன. இதனால் பம்பு செட் தொழில் வர்த்தகத்தை அதிகரிக்கவும் அதனை நம்பியுள்ள சிறு குறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்தவும் தனியாகத் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காப்பர் அலுமினியம்
கடந்த சில மாதங்களாக காப்பர், அலுமினியம், ஸ்டீல் உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இத்தகைய மூலப்பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வர ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.

மூலப்பொருட்கள் விலையுயர்வு
மத்திய அரசுடன் இணைந்து மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்காணித்துத் தீர்வு காணும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என தொழில் துறையினர் எதிர்பார்க்கிறார்கள். கோடைக்காலம் நெருங்கி வரும் நிலையில் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

திமுக ஆட்சி
இதனால் தொழிற்சாலைகள் இயங்குவதில் சிரமம் உள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அவ்வப்போது அறிவிக்கப்படாத மின் வெட்டு இருந்ததாக விமர்சனங்கள் உண்டு. நேற்று கூட பாஜக தலைவர் அண்ணாமலை, கோடைக்காலம் வந்துவிட்டது. இனி மின்வெட்டு ஏற்படலாம். ஜெனரேட்டர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என திமுக அரசை விமர்சித்திருந்தார்.

மின் வெட்டு
எனவே மின்வெட்டை தவிர்க்கும் வகையில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சாரம் உள்ளிட்ட மாற்றுத் திட்டங்களை ஊக்குவிக்க நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. கோவை பெருநகர வளர்ச்சி மேம்பாட்டு ஆணையம் அமைக்க வேண்டும். புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பிணையின்றி கடன் உதவி வழங்குதல் வேண்டும்.

இலவச மின்சாரம்
இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சிறு குறு தொழிற்சாலைகளுக்கு இலவச மின்சாரம், கோவையை மின் வாகன மோட்டார் தயாரிப்பு மையமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளுடன் தொழிற்துறையினரும் தொழில் அமைப்புகளும் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். இவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுமா என்பது நாளை தெரியும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications