திசையன்விளை, மணப்பாறை உள்ளிட்ட 10 சிறு நகரங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்- அசத்தல் பட்ஜெட்
சென்னை: தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப தொழிற்பயிற்சி அளிக்க ஏதுவாக நெல்லை, அரியலூர் உள்ளிட்ட 10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025- 2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது அவர் 25 ஆண்டுகளுக்கான பட்ஜெட் என குறிப்பிட்டு பட்ஜெட்டை வாசித்தார்.

இதுகுறித்து தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிக்கையில், திறன்மிக்க மனிதவளத்தை அதிகரித்திடவும், தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப தொழிற்பயிற்சி அளித்து இளைஞர்களுக்கு பயனுள்ள வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்
தருவதற்கும், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, அரியலூர் மாவட்டம்
தா.பழூர், இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை, திருச்சி மாவட்டம்
மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல், காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம்,
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில், அரியலூர் மாவட்டம் தா.பழூர், இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை, திருச்சி மாவட்டம் மணப்பாறை, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தென்காசி மாவட்டம் குறுக்கள்பட்டி, மற்றும்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆகிய 10 இடங்களில் தலா 4 தொழிற்பிரிவுகள்
கொண்ட புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மொத்தம் 152 கோடி ரூபாய்
செலவில் துவங்கப்படும்.
இதனால் ஆண்டொன்றுக்கு கூடுதலாக 1308 மாணவ மாணவியர் பயிற்சி பெற்றுப் பயனடைவர். தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், அதிக வேலைவாய்ப்பை உருவாக்கவும், பல தொழில் வழித்தடங்களை உருவாக்கிட அரசு முனைந்துள்ளது. இந்த முன்னெடுப்பின் முதற்கட்டமாக, ஒரகடம்-செய்யார் தொழில் வழித்தடம் உருவாக்கப்படும். இதனால், செய்யார் தொழிற்பூங்காவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த வழிவகை ஏற்படும். இதற்காக, 250 கோடி ரூபாய் மதிப்பில் முதற்கட்டப் பணிகள் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும்.
நகராட்சிகள், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, முக்கிய நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, 348 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12.5 கி.மீ. நீளம் கொண்ட கோயம்புத்தூர் மேற்கு புறவழிச்சாலை. மற்றும் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12.4 கி.மீ நீளம் கொண்ட திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை உள்ளிட்ட 14 புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் மொத்தம் 1,713 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டு தொடங்கும். மேலும், 48 கி.மீ. நீள மதுரை வெளிவட்டச் சாலை அமைத்திட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
பசுமையான தமிழ்நாடு என்ற இலக்கினை அடைந்திட நெடுஞ்சாலைகளைப் பசுமையாக்கும் ஒரு பகுதியாக, தமிழ் நிலப்பரப்பைச் சார்ந்த வேம்பு, புங்கை", "நாவல், புளியமரம் போன்ற இனவகைகளில் 10 இலட்சம் மரங்கள் நடப்பட்டு, புவிசார் குறியிடப்பட்டு முறையாகப் பராமரிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications