கொங்கு முதல் டெல்டா வரை.. ஒவ்வொரு ஊருக்கும் தங்கம் தென்னரசு கொடுத்த சர்ப்ரைஸ்
சென்னை: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கலாகும் சூழலில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழர் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பல அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளதாகக் கூறிய தங்கம் தென்னரசு, ரூ.285 கோடியில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கலானது. நேற்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கலானது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு சட்டசபையில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார். மேலும், ஜனவரி 25ம் தேதி தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
திருக்குறளை ஐநா மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், பெரியார் சிந்தனைகளை 21 மொழிகளில் வெளியிட்டுள்ளோம் என்றும் அம்பேத்கர் புத்தகங்களை எளிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
தமிழர் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பல அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளதாகக் கூறிய தங்கம் தென்னரசு, ரூ.285 கோடியில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும், "இந்திய அளவில் மட்டுமின்றி, உலகளவில் இரும்பு தாதுவில் இருந்து இரும்பை பிரித்து எடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் இருந்தே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களைக் காட்சிப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கனவே, கீழடி உள்ளிட்ட அருங்காட்சியகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் சமீபத்தில் தான் திறக்கப்பட்டது.
இது தவிரத் தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம், கங்கை கொண்ட சோழபுர அருங்காட்சியகம், ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரம் நாவாய் அருங்காட்சியகம், சென்னை எழும்பூரில் அரசு அருங்காட்சியகத்தில் புதிய அருங்காட்சியகம் என மொத்தம் ரூ.285 கோடி மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளது" என்றார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications