Tamil Nadu Budget 2026: இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு.. கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம் பெறுமா?
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியதும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2026-2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால், இந்த முறை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இன்று காலை 9.30 மணிக்கு 2026 -2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

தங்கம் தென்னரசு
தொடர்ந்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசித்தார். அப்போது அவர், “மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவுக்கே முன்னோடி திட்டம். மகளிருக்கு ரூ.5 ஆயிரம் வங்கி கணக்கிற்கு அனுப்பிய போது இன்ப அதிர்ச்சியில் குடும்பத்தினர் திகைத்தனர். விடியல் பயணத் திட்டத்தின் மூலமாக பெண்கள் 881 கோடி முறை அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். பெண்களின் வளர்ச்சி திட்டங்களில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
அரசு மருத்துவமனையில் பாதுகாப்பான பிரசவத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம். பிரசவத்தின் போது உயிரிழப்பு தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் மிகவும் குறைவாக உள்ளது.
ரூ.285 கோடியில் அருங்காட்சியகங்கள்
சோழர் அருங்காட்சியம், நவாய் அருங்காட்சியம், நொய்யல் அருங்காட்சியம் என மொத்தம் ரூ.285 கோடியில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்றை பெற்றுள்ளது.
தமிழகத்தில் 10,649 புதிய வீடுகள் கட்டித் தரப்படும். இலங்கை தமிழர்களுக்கு ரூ.630 கோடியில் புதிய வீடுகள் கட்டித் தரப்படும். 19.34 லட்சம் மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தினால் பயன்பெற்று வருகிறார்கள். 6 லட்சம் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. என்று பேசினார்.
சட்டசபை தேர்தல் 2026
சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட இருக்கிறது. ஆகவே, இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஏற்கனவே அறி விக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிறகு மே மாதத்தில் அமையும் புதிய அரசு, முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
இது இடைக்கால பட்ஜெட் என்றாலும் இந்த பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டது. ஏனெனில், விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மக்களவை கவரும் விதமாக பல கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம் பெறூம் என எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது.
விவசாய கடன் தள்ளுபடி இல்லை
கடந்த வெள்ளிக்கிழமை மகளிருக்கு உரிமைத்தொகை முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதோடு, கூடுதலாக 2 ஆயிரம் போனஸும் சேர்த்து 5 ஆயிரமாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இல்லத்தரசிகளை இன்ப அதிர்ச்சி இந்த அறிவிப்பு அடைய வைத்த நிலையில், இன்று இடைகால பட்ஜெட்டிலும் மக்கள் மனம் குளிரும் விதமாக முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல, கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகள் தங்களுக்கு விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications