Tamil Nadu Budget : மகளிர் உரிமைத் தொகை.. தமிழகமே இன்ப அதிர்ச்சியில்! 1.41 லட்சம் கோடி கடன்.. பட்ஜெட்டில் அடுத்த அதிரடி!
சென்னை: தமிழக அரசின் 2026- 2027ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தாக்கல் செய்தார். மகளிர் உரிமை தொகையோடு 2000 ரூபாய் கோடைகால சிறப்பு தொகை வழங்கப்பட்டதால் தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உள்ளதாக பெருமிதம் தெரிவித்த அமைச்சர், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 1.41 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் 2026 2027 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
தனது பட்ஜெட் உரையின்போது பேசிய அவர்," இந்தியாவுக்கே வழிகாட்டும் வரலாற்று கடமையை நாம் செய்து வருகிறோம். மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை மீறியும் தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

தமிழக பட்ஜெட் 2026
சோழர் அருங்காட்சியம், நவாய் அருங்காட்சியம், நொய்யல் அருங்காட்சியம் என்று மொத்தம் ரூ.285 கோடியில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்றை பெற்றுள்ளன. திருக்குறளை ஐக்கிய நாடுகள் சபை மொழிகளில் மொழி பெயர்க்கும பணி நடைபெற்று வருகிறது. ஜன 25ம் தேதி தமிழ் மொழி தியாயகிகள் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திசைதோறும் திராவிடம் திட்டத்தில் 74 நூல்கள் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.
தங்கம் தென்னரசு
பன்னாட்டு கணினி தமிழ் கருத்தரங்க்ம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,471 கோடி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1,500-ஆக உயர்த்தப்பட்டதன் மூலம் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன் பெற உள்ளனர். காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, கரையோரம் பூங்கா ஆகியவை அமைத்து நதிக்கரை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.374 கோடி ஒதுக்கீடு.
மகளிர் பயணம்
கப்பல் கட்டுமானம், கப்பல் இயந்திரங்கள் உற்பத்தி ஆகிய துறைகளில் முதலீடுகளை ஈர்க்க, தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை விரைவில் வெளியிடப்படும். இதனால், கப்பல் கட்டுமானத்திற்கான உலகளாவிய மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும். விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர்.
ரூ.1.40 லட்சம் கோடி கடன்
6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் நலன் காக்கும் இத்தகையை திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன. மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. பெண் ஓதுவார் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனை. மகளிர் உரிமைத் தொகையோடு, ரூ.2000 கோடை கால சிறப்புத் தொகை வழங்கப்பட்டதால் 'தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உள்ளது.
மடிக்கணினிகள்
உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பட்டப்படிப்புடன் தொழில்நுட்பப் பயிற்சியும் பெரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்கள் அனைவரும் இடைநிற்றலின்றி கற்பதற்கான சூழலை உருவாக்கிட தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்தக் குறிக்கோள்களை எட்டிட கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், உதவித்தொகை என பல்வேறு முன்னெடுப்புகளை அரசு செய்து வருகிறது. கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத்திறனை வளர்க்க 10 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது." என்றார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications