அடியோடு மாறுது.. மகளிருக்கு மாதம் ரூ.2500! விஜய் போட்டு வைத்திருக்கும் மெகா ப்ளான்! யார் பெயர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை 2500 ரூபாயாக உயர்த்தும் அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' என்ற திட்டத்தின் பெயரை மாற்றி 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' என பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு பரிசீலித்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் அஞ்சலை அம்மாள் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்ற பெயரும் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வர மகளிர் உரிமை தொகை திட்டம் முக்கிய காரணமாக இருந்தது. பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் 1000 ரூபாய் பணம் நேரடியாக வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பு பெரிய வரவேற்புபை பெற்றது.

vijay Kalaignar Magalir Urimai Thogai Tn Government

ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2023 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி 1000 ரூபாய் மகளிர் வங்கி கணக்குகளில் நேரடியாக வர வைக்கப்படுகிறது.

குடும்பத் தலைவிகள்

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடியே 31 லட்சம் குடும்பத் தலைவிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டம் விரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள் தேர்தல் வாக்குறுதிகளில் இந்த திட்டத்தை அப்படியே அறிவித்தன. பல மாநிலங்களில் ஆயிரம் ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

மகளிர் உரிமைத்தொகை

அந்த வகையில் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவி தொகை 1000 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார் விஜய். இந்த நிலையில் தேர்தல் நிறைவடைந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு குடும்ப தலைவிகளிடையே எழுந்தது.

முழுமையான பட்ஜெட்

இந்த நிலையில் 2026 -2027 ஆம் நிதி ஆண்டுக்கான தனது முதல் முழுமையான பட்ஜெட்டை தயாரிக்கும் பணியில் விஜய் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து அமைச்சரவை கூட்டங்களிலும், துறை அதிகாரிகளுடன் கூட்டங்களிலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசித்து வருகிறார். குறிப்பாக மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவு படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மரிய வில்சன்

இதற்கிடையே, தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், தவெக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும், தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றும் வகையில் பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனால், ரூ.2,500 உரிமைத்தொகை தொடர்பான அறிவிப்பு இந்த பட்ஜெட் கூட்டத் தொடரி இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

'மதிப்புமிகு மகளிர் திட்டம்

இந்த சூழலில், உதவித்தொகையை உயர்த்துவது மட்டுமல்லாமல், தற்போதுள்ள 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்தின் பெயரையும் மாற்றுவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தத் திட்டத்திற்கு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' என்ற புதிய பெயரை சூட்டுவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையான அஞ்சலை அம்மாள் பெயரை இந்தத் திட்டத்துடன் இணைக்கும் யோசனையும் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.2,500 வழங்கும் திட்டம்

மேலும், வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக அரசின் முதல் பட்ஜெட்டில், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,500 வழங்கும் திட்டம், அதற்கான தகுதிகள், அமல்படுத்தப்படும் தேதி உள்ளிட்ட விவரங்களுடன், திட்டத்தின் புதிய பெயர் குறித்த அறிவிப்பும் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+