வேகமாக முன்னேறும் தமிழ்நாடு.. பொருளாதார ஆய்வறிக்கை வெளியானது.. ஜெயரஞ்சன் சொன்ன சூப்பர் தகவல்
சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை வெளியானது. திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் வேளாண் செய்பவர்கள் 25% பேர் மட்டுமே உள்ளனர், வளர்ந்த நாடுகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வேளாண் செய்பவர்கள் இருக்கிறார்கள் என்று ஜெயரஞ்சன் தெரிவித்து உள்ளனர்.

மேலும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது; தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது;
மின்னணு சாதன பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு பிரமாண்ட வளர்ச்சியை அடைந்துள்ளது; உலகம் முழுவதும் தோல் அல்லாத காலணிக்கு ஒரு தேவை உள்ளது, தமிழ்நாட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் அதிகரித்து வருகிறது, என்று கூறி உள்ளார்.
மின்னணு உற்பத்தி ஏற்றுமதி
இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறையில் சுமார் 26% பங்களிப்புடன், தமிழ்நாடு நாட்டின் மின்னணு வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது. இம்மாநிலத்தின் மின்னணு ஏற்றுமதி மதிப்பு $14.65 பில்லியன் ஆகும்.
2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 41.23% பங்களிப்புடன், தமிழ்நாடு நாட்டின் முதன்மையான மின்னணு ஏற்றுமதி மாநிலமாகத் திகழ்கிறது. உலகளாவிய அளவில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன.
நீண்டகாலமாகவே மின்னணு உற்பத்தி மையமாகச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு, தற்போது தனது விரிவான செமிகண்டக்டர் திட்டம் 2030 மூலம் செமிகண்டக்டர் துறையிலும் தலைமையாக உயரத் தயாராகி வருகிறது.
தமிழ்நாடு நம்பர் 1
இதன் மூலம் மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் மீண்டும் தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை படைத்தது உள்ளது. கர்நாடகா 4.95 பில்லியன் டாலர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா முறையே 3.78 பில்லியன் டாலர் மற்றும் 2.72 பில்லியன் டாலர்களைப் பதிவு செய்துள்ளது. 2024 டிசம்பரில், தமிழ்நாட்டின் ஏற்றுமதி நவம்பரில் $1.534 பில்லியனில் இருந்து 1.524 பில்லியன் டாலராக சிறிது சரிவைக் கண்டது, ஆனாலும் மாநிலம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
நம்பர் 1 தமிழ்நாடு
ஏற்கனவே கடந்த 2023-24 நிதியாண்டில் 32.84% மொத்த பங்குடன் 9.56 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 1.86 பில்லியனாக இருந்தது. இது தமிழ்நாடு ஏற்றுமதியின் எண்ணிக்கை இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 39% ஆகும்.
அதே காலகட்டத்தில் இந்தியாவில் மொத்தமாக செய்யப்பட்ட மின்னணு ஏற்றுமதியை $16.48 பில்லியன் ஆகும். கடந்த வருடம் ஏப்ரல்-அக்டோபர் மாதங்களில் மட்டும் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 90% சதவிகித மின்னணு ஏற்றுமதியை தமிழ்நாடு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இருந்து தமிழ்நாடு அதன் சாதனையை இந்த வருடம் முறியடிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா போல அல்லாமல் தமிழ்நாடு இந்த துறையில் அடித்து ஆட தொடங்கி உள்ளது. ஏற்கனவே பல ஆப்பிள் சுற்றுச்சூழல் உதிரி பாகங்கள் சப்ளையர்களைக் கொண்டுள்ள தமிழ்நாடு, மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டத்தை ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், ரூ.30,000 கோடி முதலீடுகளை ஈர்த்து, சுமார் 60,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications