"எதிர்க்கட்சிகள் ஒண்றிணையும்.." இடைத்தேர்தலில் என்ன நடக்கும்? உடைத்து பேசும் தராசு ஷ்யாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இப்போது மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் என்ன நடக்கும்.. இந்த தேர்தல் ஏன் முக்கியம்.. எதிர்க்கட்சிகள் இந்த இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்ளும் என்பது தொடர்பாக மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாம் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இன்றைய தினம் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வாக்குப்பதிவு தேதி அக்டோபர் 6ம் தேதி நடக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பை வெளியிட்டது.

Tamil Nadu By-Election

தமிழ்நாட்டில் ஏழு தொகுதிகள் காலியாக இருக்கக்கூடிய நிலையில், ஐந்து தொகுதிகள் மீதான வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதனால் அந்த ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. மற்ற இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மதுராந்தகம், தாராபுரம் இந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தராசு ஷ்யாம்

இது தொர்பாக தராசு ஷ்யாம் கூறுகையில், "இது தவெகவுக்கு பின்னடைவு என்று சொல்ல முடியாது.. தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டை பொறுத்தவரை அவர்கள் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளனர். அதாவது தேர்தல் தொடர்பான சாதாரண வழக்கு என்றால் இடைத்தேர்தல் வைத்து விடலாம். ஆனால், இந்த 5 தொகுதிகளிலும் இருப்பது வேறு விதமான வழக்கு. அதாவது இந்த தொகுதி தேர்தல் ரத்து செய்தால்.. தன்னை வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றே வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் எங்களால் இடைத்தேர்தல் அறிவிக்க முடியாது என்றே தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

குதிரை பேரம்

தமிழ்நாடு மக்கள் குதிரை பேரத்தை ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்பதையே இந்த இடைத்தேர்தல் முடிவு செய்யும். காரணம் இதுவரைக்கும் தமிழ்நாடு சட்டசபையில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் ஓரிரு ஆண்டுகள் கழித்து, ராஜினாமா செய்துவிட்டு வேற கட்சியில் சேர்ந்து நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு தொகுதியில் வென்றுவிட்டு, பிறகு ஒரு முறை கூட அந்த தொகுதி சார்பில் அவைக்கு கூட வராமல் ராஜினாமா செய்துள்ளனர். இது அப்பட்டமான குதிரை பேரம். இதை மக்கள் ஊக்குவிக்கப் போகிறார்களா இல்லையா என்பதே எனது கேள்வி..

ஒருவேளை இதில் தவெக வென்றால் இனிமேல் இதே மாதிரியான குதிரை பேரங்கள் நிறைய வரும். தவெக தனிப்பெரும்பான்மையை நோக்கி செல்லும். அடுத்து 10-15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரப்போகுதுன்னு தவெக தலைவர்களே சொல்கிறார்கள். எனவே, தமிழக மக்கள் குதிரை பேர புகாருக்கு என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை தான் நாம் பார்க்க வேண்டும்.

யாருக்கு நெருக்கடி

இந்த இடைத்தேர்தலில் இரு தரப்பிற்கும் நெருக்கடி இருக்கிறது. வென்றே தீர வேண்டும் என்ற நெருக்கடி ஆளும் தரப்பிற்கும் இருக்கிறது. தவெகவை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற நெருக்கடி எதிர்க்கட்சிக்கும் இருக்கிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று ரிசைன் செய்தவர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள். எனவே, அதிமுக போட்டியிடட்டும் என திமுக விலகி நிற்குமா என்பது பெரிய கேள்வி.. இப்படி பல விஷயங்கள் இருக்கிறது.

ஆளும்கட்சி

தவெகவை பொறுத்தவரை ஆளுங்கட்சியாக முழு பலத்தோடு களத்தில் இறங்குவார்கள்.. அதில் மாற்று கருத்து இல்லை. எதிர்க்கட்சிகளை பொறுத்தவரையில், எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒரு ஒற்றுமை ஏற்படும்னுதான் நான் நினைக்கிறேன். இதில் வீழ்த்தப்பட வேண்டியது யார் என்ற கேள்விக்கான விடையை திமுகவும் அதிமுகவும் சேர்ந்து மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதுதான் என் கருத்து" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+