டாப் கியரில் தமிழ்நாடு.. மொத்தம் 15 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மொத்தம் 15 முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
வழக்கமாக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னர் அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டப்பட்டது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசியதாவது, "தொழில்துறையில் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 15 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தமாக ரூ.34,237 கோடி மதிப்பீட்டில் முதலீடு குவிந்து இருக்கிறது. இதன் மூலம் 55,096 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை உறுதி செய்யும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். தமிழக அரசின் முக்கிய திட்டம் குறித்து பிப்ரவரி 13ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும். பிப்ரவரி 12ஆம் தேதி கருத்தரங்கில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்" என்று அமைச்சர் கூறி இருக்கிறார்.
முன்னதாக சென்னையில் கடந்த 2024ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழ்நாட்டில் அடிடாஸ் நிறுவனத்தின் திறன் மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க ஒப்பந்தம் செய்திருந்தது. இதனை மேற்கோளிட்டு பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழகம் இதுவரை இல்லாத தொழில் வளர்ச்சி உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என்று கூறியுள்ளார்.
மேலும், வின்பாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது குறித்தும் அமைச்சர் பேசியிருந்தார். வின்பாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வருகிறது என்று சொன்னவுடன், பலரும் இதெல்லாம் நடக்கிற கதையா? என்று கேட்டிருந்தனர். மட்டுமல்லாது, புரிந்துணர்வு திட்டங்களில் கையெழுத்திடுவதுடன் நிறுவனம் நின்றுவிடும். மற்றபடி நிறுவனத்தை தொடங்குவதெல்லாம் சாத்தியமில்லை என்று சொன்னார்கள். ஆனால், நாங்கள் நிறுவனத்தை கொண்டுவந்துவிட்டோம் என கூறியுள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications