தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்! பொன்முடிக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு
சென்னை: தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடிக்கு காதி துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனிடம் கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்துறை இருந்தது. தற்போது இதில் காதி துறை பிரித்து பொன்முடிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள்தான் இருக்கிறது. எனவே தேர்தலை மனதில் வைத்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் உட்பட அனைவருக்கும் திமுக தலைமை உத்தரவிட்டிருக்கிறது. குறிப்பாக அமைச்சர்கள் தங்கள் துறையில் எந்த நலத்திட்டங்களையும் பெண்டிங் வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளையும், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களையும் சுட்டிக்காட்டி விமர்சனங்கள் எழக்கூடாது என்பதில் கட்சி தலைமை கவனமாக இருக்கிறது.
புறம்போக்கு நிலங்களில் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்கும் ஆணைக்கு சட்டமன்றத்தில் சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஏறத்தாழ 50,000 பேர் பயனடைவார்கள் என்று சொல்லப்படுகிறது. தவிர, துறை சார்ந்த திட்டங்களையும் முடித்துவிட்டால் அதன் பலன்களை தேர்தலில் அறுவடை செய்துக்கொள்ளலாம் என்று திமுக தலைமை கணக்குப்போடுகிறது. இதன் வெளிப்பாடாகத்தான் தற்போது அமைச்சரவை இலாகா மாற்றப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
திமுக ஆட்சியில் இலாக்காக்கள் மாற்றப்படுவது இது முதல் முறையல்ல. இப்போது ராஜகண்ணப்பன் வசம் இருந்த பால்வளத்துறை முன்னர், முதலில் ஆவடி நாசர் வசம்தான் இருந்தது. ஆனால் பால் கொள்முதலில் முறைகேடு இருப்பதாகவும், தனியார் பால் நிறுவனங்கள் இதன் மூலம் கொழிந்து வளர்ந்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன. மட்டுமல்லாது ஆவின் நிலையத்திற்கு வரும் பால், வழியில் கொள்ளையடிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் வெடித்து கிளம்பின.
இதனையடுத்து இந்த துறை, அவரிடமிருந்து பிடுங்கப்பட்டு, கன்னியாகுமரியை சேர்ந்த மனோதங்கராஜிடம் வழங்கப்பட்டது. இருப்பினும் குற்றச்சாட்டுகள் குறைந்தபாடில்லை. அதிரடியான செய்தியாளர்கள் சந்திப்பு, பால் கொள்முதல் நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுவது என மனோவும் முடிந்தவரை வேகம் காட்டி வந்தார். ஆனால், பால் விநியோகர்கள் பிரச்சனை மூலம், அமைச்சர் பொறுப்புக்கே ஆபத்து வந்துவிட்டது. பால்வளத் துறை இலாகா, ராஜகண்ணப்பனிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடக்கத்தில் ராஜகண்ணப்பனிடம் போக்குவரத்து துறை இருந்தது. அங்கு எழுந்த சலசலப்புகள் விவாதங்களாக வெடிக்கவே அந்த துறை சிவசங்கருக்கு கைமாற்றப்பட்டது. அதற்கு பதிலாக பால்வளம் மற்றும் காதி துறை ஒப்படைக்கப்பட்டிருந்தது. தற்போது காதி துறை பொன்முடிக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராகவே தொடர்வார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications