ஸ்டாலின் சத்தமின்றி சிக்ஸர்! தலித் பிரதிநிதிகளுக்கு மிக முக்கிய அமைச்சரவை! இந்த 3 அறிவிப்பை பாருங்க
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்தில்.. 3 தலித் பிரதிநிதிகளுக்கு முக்கியமான அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன. தலித் முதல்வர் என்ற வாதம் தமிழ்நாட்டில் எழுந்துள்ள நிலையில்தான்.. தலித் சமூக எம்எல்ஏக்களுக்கு முக்கியமான இலாக்காக்கள் வழங்கப்பட உள்ளன. புதிய அமைச்சர்கள் இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவி முன் பதவியேற்க உள்ளனர்.
தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்படுகிறது. இன்று புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள். இன்று மாலை செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்.

அமைச்சரவை மாற்றம்: இன்று அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார். அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார்.
தங்கம் தென்னரசு நிதித்துறையுடன், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார். அமைச்சர் ராஜகண்ணப்பன் காதி மற்றும் பால்வளத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார். அமைச்சர் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கீடு அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார்.
தலித் சமூகத்து அமைச்சர்கள்: அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர் மதிவேந்தனுக்கு ஆதி திராவிட நலத்துறை இன்று வழங்கப்பட உள்ளது. ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த கோவி செழியனுக்கு உயர்கல்வித் துறை வழங்கப்பட உள்ளது. அதேபோல் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர் அக்கா கயல்விழிக்கு மனிதவள மேம்பாட்டு துறை வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் தலித் பிரதிநிதிகளுக்கு முக்கிய அமைச்சரவை இலாக்காக்களை ஒதுக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தலித் முதல்வர்: தமிழ்நாட்டில் சமீப நாட்களாக தலித் முதல்வர் என்ற விவாதம் எழுந்துள்ளது. விசிக ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் இதை பற்றி பேசி இருந்தார். இதை தொடர்ந்து தலித் முதல்வர் தொடர்பான விவாதங்கள் தீவிரமாக நடந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் தலித் பிரதிநிதிகளுக்கு முக்கிய அமைச்சரவை இலாக்காக்களை ஒதுக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
என்னென்ன துறைகள்: செந்தில் பாலாஜி உட்பட 4 பேருக்கும் எந்த இலாகாக்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மேலும் செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் நாளை அமைச்சராக சேர்க்கப்படும் நிலையில் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் அமைச்சர் மஸ்தான் வசம் இருந்த சிறுபான்மையினர் துறை சா.மு.நாசருக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர் ராமச்சந்திரன் வசம் இருந்த சுற்றுலாத்துறை ஆர்.ராஜேந்திரனுக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் பொன்முடி வசம் இருந்த உயர்கல்வித்துறை முனைவர் கோவி.செழியனுக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன் முத்துச்சாமியிடம் கூடுதல் பொறுப்பாக மது விலக்கு இருந்தது. தங்கம் தென்னரசுவிடம் மின்சாரம் இருந்தது. இரண்டும் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications