Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அட்வைஸ்லாம் கொடுக்க மாட்டேன்".. துணை முதல்வராகும் உதயநிதி பற்றிய கேள்விக்கு கனிமொழி கூறிய பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் இன்று பதவியேற்கும் நிலையில் அவருக்கு ‛பொறுப்புக்கு கூடுதலாக இருக்கிறது. நீங்கள் கொடுக்க கூடிய அட்வைஸ் என்ன?' என பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு கனிமொழி எம்பி, ‛‛நான் யாருக்கும் அட்வைஸ் கொடுக்கிறது இல்லை. அட்வைஸ் எல்லாம் இந்த காலத்தில் யாருக்கும் தேவையில்லை'' எனக்கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட உள்ளது. அமைச்சரவையில் இருக்கும் 3 பேர் நீக்கப்பட்டு 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். இந்த அமைச்சரவை மாற்றம் இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது.

udhayanidhi stalin tamil nadu cabinet shuffle kanimozhi

இந்த விழாவில் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். அதேபோல் செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்.

மேலும் 3 பேர் இன்று அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளனர். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சர் கே ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில் தான் சென்னையில் திமுக எம்பி கனிமொழி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அமைச்சரவை மாற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின், ‛‛துணை முதல்வர், அமைச்சராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது முதலமைச்சர் எடுக்க வேண்டிய முடிவு. முதலமைச்சர், உதயநிதிக்கு அந்த வாய்ப்பு, பொறுப்பை வழங்கி இருக்கிறார்கள். அவர் (உதயநிதி) மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும். எனது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.

இதையடுத்து பத்திரிகையாளர் ஒருவர்,‛‛பொறுப்புகள் கூடுதலாக இருக்கிறது. இதனால் உதயநிதிக்கு நீங்கள் கொடுக்க கூடிய அட்வைஸ் என்ன?'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கனிமொழி, ‛‛நான் யாருக்கும் அட்வைஸ் கொடுக்கிறது இல்லை. யாருக்கு என்ன கொடுத்தால் சரியாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டு தான் முதலைமைச்சர் சரியாக கொடுத்து உள்ளார்கள். அதனால் அட்வைஸ் எல்லாம் இந்த காலத்தில் யாருக்கும் அவசியம் இல்லை.

எல்லாருக்குமே என்ன பண்ண வேண்டும்? என்பது நன்றாகவே தெரியும். நான் எனது மனமார்ந்த் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். புதிதாக பதவியேற்கும் அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்'' என கனிமொழி கூறினார். முன்னதாக இன்று உதயநிதி ஸ்டாலின் தனது அத்தையான கனிமொழி எம்பியிடம் வாழ்த்து பெற்றார்.

சென்னை சிஐடி காலனியில் உள்ள இல்லத்துக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் சென்றார். துண்டு அணிவித்து உதயநிதி ஸ்டாலினை, கனிமொழி வரவேற்றார். அதன்பிறகு உதயநிதி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் போட்டோவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பினை ஏற்கும் நிலையில் , கருணாநிதியின் சிஐடி காலனி இல்லத்துக்கு சென்று அவரது திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தோம். கழக நாடாளுமன்ற குழு தலைவர் - கழக துணை பொதுச்செயலாளர் அத்தை கனிமொழின் வாழ்த்துகளை பெற்றோம்'' என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+