அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ் வருமா? முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கூடியது தமிழக அமைச்சரவை கூட்டம்
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று பகல் 12 மணி அளவில் கூடியிருக்கிறது.. 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதம் 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்றைய தினம் தமிழக அமைச்சரவை கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இப்போதுவரை 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது..

2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில், பட்ஜெட்டை இறுதி செய்யும் பணிகளும், தீவிரமாகி வருகிறது. அந்தவகையில், வரும் மார்ச் 14-ந்தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.. மறுநாளே அதாவது மார்ச் 15-ந்தேதி வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இன்று அமைச்சரவை கூட்டம்
இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று பகல் 12 மணி அளவில் கூடியிருக்கிறது.. அடுத்த மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது...
குறிப்பாக, அடித்தட்டு மக்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இன்னும் கூடுதலாக ஏதேனும் திட்டங்களை அமல்படுத்த முடியுமா? என்பது குறித்தும் இன்றைய தினம் ஆலோசித்து, இதனையும் பட்ஜெட்டில் சேர்ப்பது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
அமைச்சரவையில் விவாதிக்க முடிவு?
அதேபோல, வேறு ஏதாவது கூடுதலாக திட்டங்களை அமல்படுத்த முடியுமா? என்பது குறித்து ஆலோசித்து, அதையும் பட்ஜெட்டில் சேர்ப்பது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
மேலும், தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது, அரசு ஊழியர்கள் பிரச்சினை போன்றவை குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவது குறித்தும், மும்மொழிக் கொள்கை பிரச்சினை விஸ்வரூபமெடுத்துள்ளது குறித்தும் இன்றைய தினம் ஆலோசிக்கப்படலாம்.
தேர்தல் வாக்குறுதிகள்
அதுமட்டுமல்ல, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் ஓயாமல் குற்றஞ்சாட்டி வரும்நிலையில், இதனை முறியடிக்கும் வகையில் திமுக தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றப்படாமல் உள்ள வாக்குறுதிகளையும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இப்படி நிறைவேற செய்துவிட்டால், அது தங்களுக்கு வரப்போகும் தேர்தலுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் திமுக தரப்பில் கருதப்படுகிறது.
அதேபோல, செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் தொடர்பான திட்டங்களை தொடர்வதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும், கூடுதல் பயனாளிகளை சேர்ப்பதற்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும் இன்று விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு விண்ணப்பித்துள்ள சில முக்கிய நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிப்பதற்கான ஒப்புதலும் இந்த கூட்டத்தில் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
பட்ஜெட் மட்டுமல்லாமல், இந்த கூட்டத்தொடரில் 110 விதியின் கீழும் பல்வேறு அறிவிப்புகள் முதலமைச்சரால் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications