தண்ணீர் லாரி வேலை நிறுத்தம்.. சென்னை உட்பட பல இடங்களில் கேன்-வாட்டர் உற்பத்தி நிறுத்தம்!
தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து சென்னை உட்பட பல இடங்களில் கேன் - வாட்டர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து சென்னை உட்பட பல இடங்களில் கேன் - வாட்டர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தண்ணீர் தற்போது கனிமவளம் என்று பிரிவின் கீழ் வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தண்ணீர் எடுக்க சில கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். ஆனால் இவ்வளவு நாட்கள் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், தற்போது தமிழகம் முழுக்க நிலத்தடி நீரை வணிக ரீதியாக பயன்படுத்த அரசு தடை விதித்து இருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசின் இந்த தடைக்கு எதிராக தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கி இருக்கிறார்கள். முக்கியமாக சென்னை உட்பட பல இடங்களில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.
இதன் காரணமாக காலையிலே தண்ணீர் லாரிகள் பல இயங்காமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது சென்னை, விழுப்புரம் , திருவள்ளூர் உட்பட பல இடங்களில் கேன் - வாட்டர் உற்பத்தி இன்று மாலை முதல் நிறுத்தபட்டுள்ளது.
தண்ணீர் லாரி வேலை நிறுத்தத்தை தொடர்ந்து கேன் வாட்டர் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது. நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications