Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்க போனுக்கு தமிழ்நாடு அரசு அனுப்ப போகும் மெசேஜ்.. கவனமாக பார்த்துக்கோங்க.. ரொம்ப முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை தமிழ்நாடு அரசு மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, மேம்படுத்தவும், பேரிடர்களின் போது பொதுமக்களின் அவசரகால பாதுகாப்பு தகவல்தொடர்புகளை மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை ஓட்டம் எதிர்வரும் 20.10.2023 அன்று நடத்தப்பட உள்ளது.

"செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" தொழில்நுட்பமாகும். இதில் ஒரு முறை என்பது ஒரு அதிநவீன செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்பேசிகளுக்கும், இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வசதி உள்ளது.

Tamil Nadu Cell Phone users to get a common SOS message from the government for testing

என்ன சோதனை: கடுமையான வானிலை எச்சரிக்கைகள் (எ.கா., சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்றவை) பொதுப் பாதுகாப்புச் செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" பயன்படுத்தப்பட உள்ளது. இத்தொழில்நுட்பம் பேரிடர் எச்சரிக்கை தகவல்கள், சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பரவலாக தெரிவிக்க பயன்படுத்தப்பட உள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பில் தொடர்ச்சியான உறுதிப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரிடமும் "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" அமைப்பின் சோதனையினை 20.10.2023 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடத்த உள்ளது.

( ஸ்டாலின் போட்ட கையெழுத்து.. வீடு தேடி வரும் பணம்.. மகளிர் உரிமைத்தொகையை விடுங்க.. அடுத்த சர்ப்ரைஸ்)

சோதனைக் காலத்தில், பொதுமக்களின் செல்போன்களில் அவசர எச்சரிக்கைகள் பெறப்படும். இந்த விழிப்பூட்டல்கள் திட்டமிட்ட சோதனைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும் என்றும், உண்மையான அவசரநிலையைக் குறிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சோதனை ஓட்டத்தால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சமீபத்தில் சோதனை: இந்தியா முழுக்க சமீபத்தில் கிட்டத்தட்ட 90 சதவிகித ஆண்ட்ராய்டு போன் யூசர்களுக்கு எச்சரிக்கை மெசேஜ் இதேபோல் அனுப்பப்பட்டது.

அப்போது அனுப்பப்பட்ட மெசேஜில் "This is a SAMPLE TESTING MESSAGE sent through Cell Broadcasting System by Department of Telecommunication, Government of India. Please ignore this message as no action is required from your end. This message has been sent to TEST Pan-India Emergency Alert System being implemented by National Disaster Management Authority. It aims to enhance public safety and provide timely alerts during emergencies." என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதாவது, இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் செல் ப்ராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனை மெசேஜ் ஆகும் இது. உங்கள் தரப்பில் இந்த மெசேஜ் தொடர்பாக நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை என்பதால், இந்த செய்தியை புறக்கணிக்கவும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் அகில இந்திய அவசர எச்சரிக்கை சிஸ்டத்தின் சோதனைக்காக இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

Tamil Nadu Cell Phone users to get a common SOS message from the government for testing

இது மக்களின் பொது பாதுகாப்பை மேம்படுத்துவதையும் அவசர காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதையும் உறுதி செய்வதற்காக இந்த சோதனை செய்யப்பட்டு உள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

என்ன காரணம்?: மக்களுக்கு அனுப்பப்பட்ட இந்த மெசேஜ் இந்திய தேசிய பேரிடர் ஆணையம் மூலம் அனுப்பப்பட்ட மெசேஜ் ஆகும். பேரிடர் காலங்களில் இந்தியா முழுக்க ஒரே நேரத்தில் அவசர மெசேஜ் அனுப்புவதை சோதிக்கும் விதமாக இந்த டெஸ்ட் செய்யப்பட்டது.

உதாரணமாக போர் காலங்களில் மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு உள்ளிட்ட அவசர மெசேஜ்களை அனுப்ப வேண்டும் என்பதற்காக இந்த வசதி பயன்படுத்தப்படுகிறது. இதுதான் இன்று அரசு மூலம் சோதனை செய்யப்பட்டு உள்ளது.இந்த அமைப்பின் தரம், வேகம் ஆகியவை குறித்து சோதனை செய்யும் விதமாக அடிக்கடி இந்த சோதனை அரசு மூலம் செய்யப்படுகிறது .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+