Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்யாணமான ஆண்கள்.. குடும்பத்திற்கே நிம்மதி.. வெளியான முக்கிய உத்தரவு..பெண்களே கண்டிப்பாக பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரதட்சணை கொடுமை தொடர்பான புகார் மீது வழக்கு பதிவு செய்யும்போது முதல் தகவல் அறிக்கையில் கணவரின் குடும்பத்தினர் பெயர்களை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் படி தமிழக டிஜிபிக்கு தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் அனுப்பி இருக்கிறார்.

வழக்குகளில் தேவையில்லாமல் கைது நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொள்ள கூடாது எனவும், அதை இயந்திரத்தனமாக மாஜிஸ்திரேட்கள் அங்கீகரிக்க கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Tamil Nadu Chief Criminal Advocate has sent a important letter to DGP over dowry abuse case

அதில், குறிப்பாக வரதட்சணை கொடுமை தொடர்பான புகார்களின் கணவரின் பெயருடன் அவருடைய குடும்பத்தினர் பெயர்களும் சேர்க்கப்படுவதாகவும், இதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதற்கு பதில், கணவரின் பெயரை மட்டும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் எனவும், விசாரணைக்கு பிறகே குடும்ப உறுப்பினர்கள் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்களா என தெரியவரும் என்பதால், குடும்பத்தினர் பெயரை சேர்க்காமல் 'மற்றும் பலர்' என குறிப்பிட வேண்டும் எனவும் காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி குறிப்பிட்டுள்ளார்.

முதல் தகவல் அறிக்கைகளில் குடும்பத்தினர் பெயர்கள் சேர்க்கப்படும்பட்சத்தில், அது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி அவர்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனி, வரதட்சணை கொடுமை வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைகளில் கணவரின் பெயரை மட்டும் குறிப்பிடும்படி சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும், குடும்பத்தினரின் பெயர்களை குறிப்பிடுவதற்கு பதிலாக மற்றவர்கள் என குறிப்பிடலாம் எனவும் யோசனை தெரிவித்துள்ளார்.

வரதட்சணை சட்டம்: இந்தியாவில் 1961ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வரதட்சணை தடை சட்டப்படி, திருமணத்தின்போது வரதட்சணை கொடுப்பதும் குற்றம், பெறுவதும் குற்றமாகும். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துபவர்கள் மீது இந்த சட்டத்தின் பிரிவு 498(ஏ)ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வரதட்சணை கேட்டு ஒரு பெண் கொடுமைப்படுத்தப்பட்டது உறுதியானால், கணவர், மாமனார், மாமியாருக்கு குறைந்தபட்சம் 6 மாதம் சிறைத்தண்டனை கிடைக்கும். அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வரை குற்றத்தின் தன்மையை பொறுத்து கிடைக்கும். வரதட்சணை கொடுமையால் பெண் மரணம் அடைந்தால் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும். அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை கிடைக்கும்.

இந்த சட்டத்தால் பெரிய அளவில் எந்த மாற்றமும் சமூகத்தில் நடக்கவில்லை. வரதட்சணை வாங்குவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதேநேரம் கட்டாயப்படுத்தி வரதட்சணை வாங்குவது, துன்புறுத்துவது போன்ற செயல்களை செய்யும் குடும்பத்தினர் மீது ஒரு பெண் புகார் கொடுக்க தயங்குகிறார். காரணம் அதன்பின்னர் குடும்ப வாழ்க்கை முறிந்துவிடும் என்ற பயத்தில் அப்படி இருக்கிறார். இதை சாதகமாக்கி கொண்டு கணவன் குடும்பத்தினர் கொடுமை படுத்துவதும் நடக்கிறது.

இதேபோல் வரதட்சணை தடுப்பு சட்டத்தை சில பெண்கள் தவறாக பயன்படுத்துவதும் நடக்கிறது.அப்படியான சூழலில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவன், மாமனார், மாமியார், அண்ணி, நாத்தனார் என குடும்பத்தினரை அந்த பெண் தவறாக பழிவாங்கி, அது செய்தியாக புகைப்படத்துடன் ஊடகங்களில் வருவதால் அவர்கள் நிரந்திர பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால் தான் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கணவரின் பெயரை மட்டும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் எனவும், விசாரணைக்கு பிறகே குடும்ப உறுப்பினர்கள் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்களா என தெரியவரும் என்பதால், குடும்பத்தினர் பெயரை சேர்க்காமல் 'மற்றும் பலர்' என குறிப்பிட வேண்டும் எனவும் காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வலியுறுத்தி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+