தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை முக்கியம்.. தலைமை தேர்தல் அதிகாரி 15 துறையுடன் மீட்டிங் -பின்னணி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னையில் வருமான வரித்துறை, வணிக வரித்துறை, காவல்துறை உள்பட 15 துறை அதிகாரிகளுடன் முக்கிய மீட்டிங் நடத்திய நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. முதற்கட்டமாக SIR எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கான விண்ணப்பங்களை பொதுமக்கள் பிஎல்ஓக்களிடம் வழங்க நாளை கடைசி நாளாகும். அதன்பிறகு டிசம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. பிறகு 2026 பிப்ரவரி மாதம் 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தான் இன்று சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய ஆலோசனையை மேற்கொண்டார். வருமான வரித்துறை, வணிக வரித்துறை, காவல்துறை, சிஆர்பிஎஃப், ரயில்வே உள்பட மொத்தம் 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக அமல்படுத்துவது, பணப்பட்டுவாடாவை தடுப்பது, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தை எடுத்து கொண்டால் எப்போதுமே ஒரே கட்டமாக தான் சட்டசபை தேர்தல் நடக்கும். பல கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்காது. இந்த முறையும் ஒரே கட்டமாக 234 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு தான் உள்ளது.
இந்த தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த உடன் மாநிலம் முழுவதும் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அதன்பிறகு அசம்பாவிதங்களை தடுக்க கண்காணிப்பு பலப்படுத்தப்படும். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, தேர்தல் நடத்தை விதிமுறையை முறையாக அமல்படுத்துவது உள்ளிட்டவற்றில் பெரும் சவால் இருக்கும்.
மேலும் பல இடங்களில் பொதுமக்களின் வாக்குகளுக்கு பணம் விநியோகம் செய்யப்படலாம். இதனை தடுக்க காவல்துறை, வணிக வரித்துறை, வருமான வரித்துறை உள்பட பிற அரசு துறைகளின் ஆதரவு என்பது வேண்டும். இதனால் தான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் 15 முக்கிய துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications