காலையில் மனு போட்டேன்..உடனே கிடைச்சிருச்சு! ’மக்களுடன் முதல்வர்’ .. நெகிழ்ச்சியுடன் பேசிய மக்கள்..!
சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக 5 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்களுடன் முகாம் ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். மேலும் பயனாளிகளுடனும் முதலமைச்சர் கலந்துரையாடிய நிலையில், அவர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுகூட்டம் மேற்கொண்டார்.

மேலும் காணொலி வாயிலாக நாகப்பட்டினம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி முகாம் ஏற்பாடுகள் குறித்தும், பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் மற்றும் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து பயனாளிகளிடமும் கேட்டறிந்தார்.
அரசு துறைகளை தொடர்பு கொள்ளும் பொது மக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி. வெளிப்படைத்தன்மையினை அதிகரித்து அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுசேரும் வகையில் "மக்களுடன் முதல்வர்" என்ற புதிய திட்டம் முதல்வரின் முகவரித்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக, பொதுமக்கள் அதிகமாக பயன்பெறும் 13 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளை பெறும் வண்ணம் அனைத்து மாநகராட்சிகள். நகராட்சிகள், பேரூராட்சிகள். நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் "மக்களுடன் முதல்வர்" திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இத்திட்டம் 18.12.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டு, பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சுமார் 2058 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் விரைவாக பரிசீலிக்கப்பட்டு உரிய பயன்கள் முறையாக பயனாளிகளுக்கு சென்று சேர்ந்துள்ளது. முகாம்கள் வாயிலாக மொத்தம் 8.75 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
இந்நிலையில்,” "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வுகூட்டம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து காணொலி வாயிலாக நாகப்பட்டினம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி முகாம் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கேட்டறிந்த விவரங்கள்
முகாமிற்கு மக்களுடைய வரவேற்பு எப்படி இருக்கிறது? முகாமிற்கு வருகை தந்துள்ள பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி. கழிப்பறை வசதி போன்ற வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா? எத்தனை முகாம்கள் நடைபெற்றுள்ளன? இதுவரை நடைபெற்ற முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை குறித்தும், சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை மனுக்கள் பெறப்படுகிறது என்பது குறித்தும், அதிகமாக எந்தெந்த துறைகளின் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்படுகிறது. முகாம்களில் எத்தனை கவுன்ட்டர்கள் மற்றும் கணிணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன போன்ற விவரங்களை கேட்டறிந்தார்.
"மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நடைபெறுவது குறித்து பொதுமக்களுக்கு விளம்பரம் மூலம் எவ்வாறு தெரிவிக்கப்பட்டது என்பது குறித்தும். முகாம்கள் காலை எத்தனை மணிக்கு தொடங்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார். இதற்கு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர்கள் பதிலளித்தனர். தொடர்ந்து பொதுமக்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின், கருத்துக்களை கேட்டறிந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலெஷ்மி அவர்கள். மருத்துவ காப்பீட்டு அட்டை கேட்டு இன்று காலை விண்ணப்பித்ததாகவும், உடனே காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டதாகவும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முனியாண்டி, சக்கர நாற்காலி கோரி இன்று விண்ணப்பித்ததாகவும், உடனடியாக தனக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டதாகவும், அதற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளி ஒருவர், பட்டா பெயர் மாற்றம் கோரி இன்று விண்ணப்பித்ததாகவும், துரிதமாக தனக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யப்ப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டதாகவும், அதற்காக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications