Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லிக்கு பறக்கும் டிஆர் பாலு..வெற்றியின் முகட்டில் இந்தியா! முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பா.ஜ.க.வின் பத்தண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது என தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாட்டின் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 7ஆம் மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணிக்கை, தேர்தலுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு இந்தியா கூட்டணி அழைப்பு விடுத்தது.

Mk Stalin DMK TR Baalu Lok Sabha Election 2024

ஒன்றாம் தேதியான இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டில் இந்த கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட் கட்சிகள் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.

இந்தியா கூட்டணி: அரவிந்த் கெஜ்ரிவால் நாளை திகார் சிறையில் சரணடைய இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. கட்சித் தலைவர்களை பொறுத்தவரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முன்னாள் துணை முதலமைச்சரான தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

திடீர் ரத்து: இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தான் பங்கேற்க மாட்டேன் தனது கட்சி சார்பில் பிரதிநிதி ஒருவர் பங்கேற்பார் என மம்தா பானர்ஜி கூறியிருந்தார். கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்வார் என கூறப்பட்டது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் எனவும் அவருக்கு பதிலாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் ஆன டிஆர் பாலு பங்கேற்பார் என நேற்று தகவல் வெளியானது.

பாசிச பாஜக: இந்நிலையில் இன்று அந்த கூட்டம் நடக்கும் நிலையில், வெற்றியின் முகட்டில் நிற்கிறது என தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின்," பா.ஜ.க.வின் பத்தண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ.க.வுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணிதிரளாக அது அமைந்திருக்கிறது.

வெற்றிச் செய்தி: இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது. தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பா.ஜ.க. உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன.

டிஆர் பாலு: வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஜூன் 4 - இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கழகப் பொருளாளரும் - நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். பாசிச பா.ஜ.க. வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!" என பதிவிட்டுள்ளார்.

Mk Stalin DMK TR Baalu Lok Sabha Election 2024
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+