'உங்களில் ஒருவன்' படித்து பாராட்டிய 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்.. நன்றி கூறிய முதல்வர் ஸ்டாலின்..!
சென்னை : 'உங்களில் ஒருவன்' படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்துக்கு நன்றி என தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கை அனுபவங்கள் அடங்கிய 'உங்களில் ஒருவன்' (பாகம் -1) என்ற சுயசரிதையை எழுதியுள்ளார்.
இதில், அவரது பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளார்.

உங்களில் ஒருவன் நூல்
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை - நந்தம்பாக்கத்தில் உள்ள 'சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில் இன்று உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த நிகழ்ச்சியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். முதல்வர் மு.க ஸ்டாலின் விழாவில் ஏற்புரை நிகழ்த்தினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் புத்தகம் திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல பணிகளுக்கு இடையேயும் ரஜினிகாந்த இந்த புத்தகத்தை முழுமையாக படித்து முடித்ததோடு, முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு புத்தகம் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக பாராட்டியுள்ளார்.

தொலைபேசியில் பாராட்டு
இந்நிலையில் 'உங்களில் ஒருவன்' படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்துக்கு நன்றி என தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், " 'உங்களில் ஒருவன்' படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் 'சூப்பர் ஸ்டார்' @rajinikanth அவர்களுக்கு நன்றி! உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது!" என பதிவிட்டுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications