ரேஸ் சூட், கையில் ஹெல்மேட்.. டிராக்கில் கலக்கிய விஜய்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் ரேஸ் டிராக்கில் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். இந்த ரேஸில் தான் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டிருந்தார். இதற்கிடையே ரேஸை முழுமையாக பார்த்து ரசித்த முதல்வர் விஜய், இறுதியில் கார் ரேஸ் சூட்டை அணிந்து வந்தார். டிராக் அருகே நின்ற மக்களை பார்த்து அவர் கை அசைத்தார்.

முதல்வர் விஜய் தற்போது பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்றுள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்க்க அவர் லண்டன் சென்றுள்ளார். பெருந்திரளாக திரண்ட மக்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். துபாய் வழியாக லண்டன் சென்ற விஜய்க்கு அங்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

Vijay Racing Suit Vijay TVK

லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் முதல்வர் விஜய், பிரபலமான சில்வர்ஸ்டோன் ரேஸ் டிராக்கிற்கும் சென்றார். அங்கு நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமாரை விஜய் சந்தித்தார். அஜித் வணக்கம் சொல்லி வரவேற்க, விஜய் அவரை கட்டி தழுவிக்கொண்டார். இருவரும் ஒன்றாக இருந்தபோது, ஒட்டுமொத்த ரேஸ் டிராக்கும் அதிர்ந்தது.

போட்டி தொடங்குவதற்கு முன்பு ரேஸ் டிராக்கிலும் அஜித் மற்றும் விஜய் சந்தித்துக் கொண்டனர். அப்போது அஜித்தின் ரேஸ் காரில் விஜய் அமர்ந்து போட்டோவும் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அஜித்துடன் கைகுலுக்கிய விஜய், அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார். இதையடுத்து கார் பந்தயத்தை தொடங்கி வைக்கும் வகையில் விஜய் பச்சைக்கொடி அசைத்தார்.

மேலும், இந்த ரேஸை பார்க்க நடிகை த்ரிஷாவும் அங்கு சென்றார். அவர் மலையாள ஷூட்டிங் ஒன்றில் பங்கேற்க ஏற்கனவே லண்டன் சென்றிருந்த நிலையில், இந்த ரேஸை நேரில் பார்க்கவும் சென்றிருந்தார்.

ரேஸ் முழுமையாக முடியும் வரை முதல்வர் விஜய் போட்டியை பொறுமையாக காத்திருந்து கண்டு ரசித்தார். இதற்கிடையே போட்டி முடிந்த பிறகு ரேசிங் உடையில் முதல்வர் விஜய் இருக்கும் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரேசிங் உடை, கையில் ஹெல்மெட் உடன் நடிகர் விஜய் டிராக்கில் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

விஜய்யின் புதிய லுக்கை பார்க்கும்போது, "முதல்வர் விஜய் ரேஸ் காரை ஓட்டப் போகிறாரா?" என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும், இது தொடர்பாக இதுவரை தெளிவான விளக்கம் எதுவும் இல்லை.!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+