இன்னும் 2 மாசம்தான் டார்கெட்! உலக தரத்தில் மாறும் சாலைகள்! தமிழ்நாடு கிராம மக்களுக்கு சூப்பர் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தில் 2024 ஜனவரிக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இருக்கும் சாலைகள், முக்கியமாக கிராமப்புற சாலைகள் விரைவில் சர்வதேச தரத்திற்கு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுக்க பல்வேறு காரணங்களுக்காகக் சாலை பணிகள் நடந்து வருகின்றன. சாலைகளை விரிவு செய்வது, பாதாள சாக்கடை அமைப்பது, கழிவு நீர் குழாய்களை அமைப்பது, கேபிள் அமைப்பது, மழை நீர் வடிகால் சென்னையில் அமைப்பது, மின்சார வடங்களை அமைப்பது, பாலம் கட்டுவது, சென்னையில் செய்வது என்று பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

Tamil Nadu Chief Ministers Village Roads Development Scheme to be finished before 2024 January

இந்த பணிகள் அனைத்தையும் இந்த மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவு தமிழ்நாடு அரசு மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களுக்கும் இந்த உத்தரவு சென்றுள்ளது.

இதனால் தமிழ்நாடு முழுக்க நடக்கும் சாலை பணிகள் விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தில் 2024 ஜனவரிக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஸ்டாலின் திட்டம்: முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தின் போது தொகுதி வாரியாக மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மக்களின் குறைகளை மனுக்களை வாங்கிய ஸ்டாலின், அதை ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவேன் என்று கூறினார். 100 நாட்களில் மக்களின் குறைகளை எல்லாம் நிறைவேற்றுவேன் என்று ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதில் பல லட்சம் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

ஸ்டாலின் கடிதம்: இந்த நிலையில்தான் ஒவ்வொரு தொகுதியிலும் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியப் பணிகள் குறித்து அந்தந்தத் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளைப் பெற்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து, இவற்றைப் பரிசீலித்து ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. உங்களுடைய தொகுதி மக்களின் பல்வேறு தேவைகளை அறிந்து, அவற்றில் மிக முக்கியமானது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் அனுப்பலாம் என்று ஸ்டாலின் கூறி இருந்தார்.

நீங்கள் கருதும் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் அளிக்கலாம். பட்டியலில் இருக்கக்கூடிய மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு. தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின்கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். அதன்படியே அதிமுக எம்எல்ஏக்கள் உட்பட பலரும் இந்த கோரிக்கைகளை அனுப்பி இருந்தனர்.

சாலை பணிகள்: பலரும் சாலை வசதி தொடர்பாக கோரிக்கைகளை வைத்து இருந்தனர். அதேபோல் மக்கள் பலர் அளித்த மனுவில் கூட இதேபோல் சாலை பணிகளை பற்றி குறிப்பிட்டு இருந்தனர். இந்த நிலையில் 285 கிராமப்புற சாலைகள் மற்றும் 141 பாலங்களை மேம்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவைட்டள்ளது. நபார்டு-கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி 2023-24ன் கீழ் 285 கிராமப்புற சாலைகள் மற்றும் 141 பாலங்களை மேம்படுத்த தமிழக அரசு ₹781 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.

டார்கெட் என்ன?: இந்த திட்டங்களில் 35 பாலங்கள் மற்றும் 13 சாலைகள் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் வைக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளாகும். கிராமப்புற அமைப்புகளுக்கு 308 கோடி ரூபாய் நிதியையும் அரசு அனுமதித்துள்ளது.

முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தில் 2024 ஜனவரிக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இருக்கும் சாலைகள், முக்கியமாக கிராமப்புற சாலைகள் விரைவில் சர்வதேச தரத்திற்கு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+