இப்படியுமா இறையன்பு ஐஏஎஸ் இருந்தார்.. உங்கள் பெயர் நிலைக்கும் சார்.. மறக்கவே முடியாத செயல்கள்
சென்னை: தலைமை செயலாளர் இறையன்பு 35 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ். பணியை முடித்து இன்று ( ஜுன் 30)ம் தேதி ஓய்வு பெறுகிறார். இவர் ஒரு தலைமை செயலாளர் என்று சொல்வதை விட மாணவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஆசானாக பார்க்கப்படுபவர். இவர் செய்த மறக்க முடியாத செயல்களை இப்போது பார்ப்போம்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சி பொறுப்பேற்றது. முதல்வராக ஸ்டாலின் 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றார். அதே நாளில் தமிழக அரசின் 48-வது தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் 7.5.2021 அன்று நியமிக்கப்பட்டார்.

1988-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இறையன்பு, ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்திய அளவில் 15-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தவர். இவர் டெல்லியில் பயிற்சியை முடித்த பின்னர் 1990-ம் ஆண்டு தமிழக கேடரில் பணிக்கு வந்தார்.
நாகப்பட்டினம் உதவி கலெக்டராக தனது ஐ.ஏ.எஸ். பணியை தொடங்கிய இறையன்பு ஐஏஎஸ் காஞ்சீபுரம் கலெக்டர், செய்தித்துறை, சுற்றுலாத்துறை என பல துறைகளில் பணியாற்றினார். தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் முதன்மை செயலாளர், அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் போன்ற பொறுப்புகளை வகித்தார்.
இறையன்பு ஐஏஎஸ் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர், மிகவும் எளிமையானவராகவும், நேர்மையானவராகவும் இதுவரை பெயர் எடுத்துள்ளார். எதிர்க்கட்சியினர் கூட இறையன்பு ஐஏஎஸ் நோக்கி இதுவரை பெரிய அளவில் கேள்விகளை எழுப்பியது இல்லை.
வெளியூரில் ஆய்வுக்கு செல்கிற போது, தன் உடைமைகளை தானே எடுத்துச்செல்வார். பிரதமர், ஜனாதிபதி போன்ற தலைவர்கள் பங்கேற்கும் விழா என்றாலும் மிக எளிமையாகவே இருப்பார். இப்படி ஒரு ஐஏஎஸ் அதிகாரி இருந்தார் என்று வரலாற்றில் இடம் பெறும் அளவிற்கு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்துள்ளார்.

சாமானியர்களுக்கு நம்மால் முடிந்த எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்பியவர், அவர்களால் எளிதில் அணுகக்கூடியவராக இருந்தார். கலெக்டராக, துறை செயலாளராக இருந்த காலத்தில் இறையன்பு ஐஏஎஸ் அவர்களை எளிதாக சந்தித்து அவர்களின் குறைகளை சொல்ல முடியும். அப்படி தன்னிடம் வருபவர்களுக்கு தேவைகளை நிறைவேற்றி தந்துள்ளார்.
அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தாலும், எந்த நிலையிலும் தன்னிலை மாறாதவராக இறையன்பு ஐஏஎஸ் இருந்தார். சாதாரண ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை எல்லோரிடமும் ஒரே மாதிரி தான் பழகி தனது பணி காலத்தை நிறைவு செய்துள்ளார் இறையன்பு ஐஏஎஸ்,.
இவர் தான் மட்டும் நேர்மையாக இருந்துவிட்டு ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்தவர் இல்லை. தன்னை போல் நேர்மையாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்கள் முதல் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் என பலரையும் பாராட்டி அவர்களை வாழ்த்தி உள்ளார். பல அதிகாரிகள் தன்னை போல் நேர்மையாக வர வேண்டும் என்று விரும்பியவர்.
பி.எஸ்சி. (வேளாண்மை) பட்டப்படிப்பை முடித்த இவர், வணிக மேலாண்மை, ஆங்கில இலக்கியம், தொழிலாளர் மேலாண்மை, உளவியல் பிரிவில் முதுகலை பட்டமும், வர்த்தக நிர்வாகம், ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் என பல பட்டங்களை பெற்றவரான இறையன்பு ஐஏஏஸ் இதுவரை 154 புத்தகங்களை எழுதி இருக்கிறார்.
இவர் தலைமை செயலாளராக பொறுப்பேற்ற உடன் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? அரசு அலுவலகங்களில் இறையன்பு ஐஏஎஸ் எழுதிய புத்தகங்கள் 2021க்கு முன்பு வரை வாங்கப்பட்டு வந்தன. ஆனால் இவர் தலைமை செயலாளர் ஆக மாறிய உடனேயே, இந்த பதவியில் இருக்கும் வரை தான் எழுதிய புத்தகங்களை அரசு நூலகங்களுக்கு வாங்கக்கூடாது என்றும், அரசு விழாக்களின் போது தான் எழுதிய புத்தகத்தை அன்பளிப்பாக தரக்கூடாது என்றும் கண்டிப்புடன் உத்தரவிட்டார்.
சாதி பாகுபாடு காரணமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் கொடியேற்ற மறுக்கப்படுவதை கடுமையாக எதிர்த்த இறையன்பு ஐஏஎஸ், சுதந்திர தினம், குடியரசு தினத்தில் ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் செய்வதை கலெக்டர்கள் கண்டிப்பாக உறுதி செய்தாக வேண்டும் என்று உத்தவிட்டார்
பணி காலம் நிறைவு பெறும் சமயத்தில் ஒரு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதெல்லாம் நிச்சயம் மறக்கவே முடியாத செயல் ஆகும். டிரைவர்கள் சுற்றுலா தளங்களுக்கு வாகனங்களை இரவு பகலாக வண்டி ஓட்டியபடி செல்வார்கள். சுற்றுலாவிற்கு வாகனத்தை புக்கிங் செய்வோர் ஓட்டல்களில் அறை எடுத்து தங்கி கொள்வார்கள். ஆனால் டிரைவர்களை கண்டு கொள்ளவே மாட்டார்கள். இதை கவனித்த இறையன்பு ஐஏஎஸ், சுற்றுலா நகரங்களில், சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் ஓட்டல்களில் சுற்றுலாவிற்கு வருவோரின் டிரைவர்களுக்கு ஓய்வு அறையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று அறிவுறுத்தினார். புதிதாக ஓட்டல்களுக்கு விண்ணப்பிக்கும் போது, டிரைவர்கள் ஓய்வு அறையை உருவாக்க அறிவுறுத்த வேண்டும் என்று வீட்டு வசதி துறைக்கு கடிதம் எழுதினார்.
டிரைவர்களுக்காக மட்டுமல்ல, மாணவர்கள் நலனுக்காக, மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்பதற்காக பலரும், பல முறை கடிதம் எழுதி உள்ளார். இறையன்பு ஐஏஎஸ் அவர்களின் கையெழுத்து மிக மிக அழகாக இருக்கும். கையெழுத்து மட்டுமல்ல, அவரது 35 வருட பணியும் அழகாக இருந்துள்ளது. ஒரு ஐஏஎஸ் அதிகாரி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இறையன்பு நிச்சயம் உதாரணமாக இருப்பார். இவரது பணிகாலம் அவருடன் வேலை பார்த்தவர்களுக்கு மட்டுமல்ல யாருக்கும் எந்த காலத்திலும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். இறையன்பு சார். உங்கள் பெயர் இங்கே நிலைத்து நிலைக்கும். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும்." இந்த குறள் இறையன்பு ஐஏஎஸ்க்கு நிச்சயம் பொருந்தும். அவருடைய தன்னம்பிக்கை வீடியோ ஒன்று செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது பாருங்கள்.
-
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications