Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐஏஎஸ் அதிகாரிகள், குடும்பத்தினர் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாவிட்டால் நடவடிக்கை: இறையன்பு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாட்டில் தற்போது பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2022ம் ஆண்டு ஜனவரி 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாகவும், உத்தரவை மீறும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வழக்கமான உத்தரவு

மத்திய அரசின் வழக்கமான உத்தரவு

ஐஏஎஸ். அதிகாரிகள் தங்களது சொத்து விவர அறிக்கையை ஆண்டுதோறும் தாக்கல் செய்யவேண்டும் என்பது மத்திய அரசின் உத்தரவாகும். மத்திய அரசு நிர்ணயிக்கும் தேதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்பது மத்திய அரசின் எச்சரிக்கையாகும். எனவே ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் உரிய படிவத்தில் தங்கள் சொத்து விவரம் குறித்த வருடாந்திர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பது நடைமுறை.
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பரம்பரை வழியாக வந்த அசையா சொத்து, தற்போது வாங்கப்படும் அசையா சொத்து, குத்தகை அல்லது அடமானத்தில் வந்துள்ள அசையா சொத்து பற்றிய விவரங்களை சொத்து விவர அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயம்.

சொத்து விவரங்களை சமர்ப்பிக்க ஆணை

சொத்து விவரங்களை சமர்ப்பிக்க ஆணை

மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள் பெயர்களில் இருப்பது மட்டும் அல்லாமல் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரத்தையும் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் அறிவுறுத்தல் ஆகும். ஒரு சில அதிகாரிகள் தாக்கல் செய்யாமல் இருப்பதால் இதுபோன்ற எச்சரிக்கை விடுப்பது நடைமுறையாக இருந்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழ்நாட்டில் தற்போது பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஜனவரி 31ம் தேதிக்குள் ஐஏஎஸ் அதிகாரிகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒழுங்கு நடவடிக்கை பாயும்

ஒழுங்கு நடவடிக்கை பாயும்

இது மட்டுமின்றி ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் அசையா சொத்து விவரங்கள் மற்றும் அதன் மூலம் வரும் வருவாய் விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி உள்ளார். ஐஏஸ் அதிகாரிகள் தங்கள் பெயரில் உள்ள அல்லது தங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள அசையா சொத்து விவரங்களை 2022ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, உண்மையான விவரங்களை தெரிவிக்காவிட்டாலோ அல்லது மறைத்தாலோ சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    ஒரே வீட்டில் இரண்டு IAS அதிகாரிகள் | Irai Anbu IAS Unknown Facts
    ஐபிஆரை பயன்படுத்தி தாக்கல்

    ஐபிஆரை பயன்படுத்தி தாக்கல்

    அசையா சொத்துகள் மூலம் கிடைக்கப் பெறும் வருமானத்தின் தகவல்களை (IPR) ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யும் முறை 2017ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்து வைத்தது. இதன்மூலம் IPR-ஐ எலக்ட்ரானிக் முறையிலோ அல்லது நேரடியாக தாக்கல் செய்யப்பட்டதற்கான ஆவணங்களை ஸ்கேன் செய்தும் பதிவேற்றம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+