தலைமை செயலகத்திற்கு வாங்க.. 14 மாவட்ட கலெக்டர்கள் நேரில் வர உத்தரவு.. இன்று முக்கியமான மீட்டிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டுவது, அரசு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கும் (நேரில்) மூன்று கட்ட ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்குகிறது..

தமிழகத்தில் அரசின் திட்டங்களை அதிகாரிகள் செயல்படுத்துவது குறித்தும், ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கின் நிலை குறித்தும் ஆய்வுக் கூட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் முதல்வர் நடத்துவது வழக்கம். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பார்கள்.அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் அதிகாரிகளுக்கு இந்தக் கூட்டத்தில் பாராட்டு மற்றும் கேடயம் முதல்வர் சார்பில் வழங்கப்படும். அதேநேரம் தொய்வு நிலையில் காணப்படும் மாவட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரைகள் வழங்குவார்.

tamil nadu Chief Secretary Collector


அதுபோல, அரசின் திட்டங்கள் குறித்தும், அமலில் உள்ள திட்டங்களின் நிலை குறித்தும் மாவட்ட கலெக்டர்களுடன் அவ்வப்போது தலைமைச் செயலாளர் ஆய்வு கூட்டம் நடத்துவதும் வழக்கமாக உள்ளது. அந்த அடிப்படையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையிலான, மாவட்ட கலெக்டர்களுடனான 3 கட்ட ஆய்வுக் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் நேரில் பங்கேற்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இன்று (11-ந் தேதி) நடக்கும் முதல் கட்ட கூட்டத்தில் பங்கேற்குமாறு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 14 மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

13-ந் தேதி நடக்கும் 2-ம் கட்ட கூட்டத்தில், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நீலகிரி ஆகிய 12 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

15-ந் தேதி நடக்கும் 3-ம் கட்ட ஆய்வுக் கூட்டத்தில், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி ஆகிய 12 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் இந்த ஆய்வுக் கூட்டங்கள் ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்குத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கடிதங்கள் தமிழகத்தின் 38 மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+