முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த கொரோனா டெஸ்ட்.. ரிசல்ட் நெகட்டிவ்
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இல்லை என்று செய்தி மக்கள் தொடர்பு துறை அறிவித்துள்ளது.
Recommended Video
சென்னையில் கொரோனா நோய் தொற்று ஓரளவுக்கு குறைந்தாலும், தென் மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. அமைச்சர்கள் சிலருக்கும் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் சிலருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
முதல்வரும் தொடர்ந்து பயணங்கள் மேற்கொண்டு வருவதால் அவருக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

பரிசோதனைகள்
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அம்மாவின் அரசு, கொரோனா நோய் தொற்றினை கண்டறிய இதுவரை தமிழ்நாடு முழுவதும் 105 பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி, நேற்று வரை 15 லட்சத்து 85 ஆயிரத்து 782 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

முதல்வருக்கு
இதன் ஒரு பகுதியாக முதல்வருக்கும், முதல்வர் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் 13ஆம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முகாம் அலுவலகம்
இந்தப் பரிசோதனையின் முடிவில், முதல்வருக்கு கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டது. மேலும், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் எவருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டம்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்கனவே ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ரிசல்ட் நெகட்டிவ் என வந்தது நினைவிருக்கலாம். இதனிடையே, தென் மாவட்டங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்று முதல்வர் அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications