Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ஓலா, ஸ்விகி பணியாளர் 'GIG workers' நலவாரியம்- யாருமே யோசிக்காத செக்டார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது சுதந்திர தின உரையில் GIG workers எனப்படுகிற ஓலா, உபேர், ஸ்விகி, ஸொமாட்டோ போன்ற நிறுவனங்களில் விரும்புகிற நேரத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான நலவாரியம் அமைக்கப்படும் என அறிவித்திருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தந்தை கருணாநிதி போல மகன் மு.க.ஸ்டாலின் யாருமே யோசிக்காத துறைகளின் பணியாளர்கள் நலனுக்கான நலவாரியம் அமைத்திருக்கிறார் என பாராட்டுகள் குவிகின்றன.

முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது என்ன?: சென்னை கோட்டையில் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தேசியக் கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். முதல்வர் ஸ்டாலின் தமது சிறப்புரையில், " ஓலா, ஊபர், ஸ்விகி, ஸொமட்டோ (Ola, Uber, Swiggy, Zomato) போன்ற நிறுவனங்களில் பணி புரியும் பணியாளர்களின் (GIG workers) ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வண்ணம், அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும்" என அறிவித்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

Tamil Nadu CM MK Stalin announces GIG Wokrers Welfare Board

GIG Workers என்பது என்ன?: கொரோனா காலத்துக்குப் பின்னர் சர்வதேச அளவில் உருவெடுத்துள்ள புதிய பணிமுறை GIG Workers என்பது. அதாவது விரும்பிய நேரத்தில் விரும்பிய பணியை செய்து கொள்ளுதல் என இதனை குறிப்பிடலாம். ஒருவகையில் அமைப்புசாரா தொழிலாளர்கள்/ அமைப்பு சாரா ஓட்டுநர்கள் போல என வைத்து கொள்ளலாம். இத்தகைய அமைப்புகளில் பொதுவாக பணிநேரம் என்பது காலை முதல் மாலைவரை என்பதான வரையறை உள்ளது. அதே நேரத்தில் GIG Workers என்போர் விரும்புகிற ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பணிசெய்துவிட்டு ஊதியம் பெற்றுக் கொள்வது என்கிற புதிய தொழிலாளர்கள் வகை. கிக் பொருளாதாரம், கிக் தொழிலாளர்கள் என்பது அண்மைகாலமாக உலக அளவில் பயன்படுத்தக் கூடிய புதிய சொற்றொடர்களாகவும் இருக்கிறது. ப்ரீலேன்சிங் ஒர்க்ஸின் இன்னொரு வடிவமாக கிக் தொழிலாளர் முறை பார்க்கவும் படுகிறது. ஒரு நிறுவனத்தில் மட்டுமே முழுமையாக வேலை பார்க்கும் முறைக்கு பதிலாக பல்வேறு நிறுவனங்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பணிபுரிந்து வருவாய் ஈட்டுகிற இந்த முறை உலகளவில் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய தொழிலாளர்களுக்கு என நலவாரியம் ஒன்றை அறிவித்திருப்பது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலம் கிக் தொழிலாளர் நலன்களுக்கான சட்டங்களையும் இயற்றியிருக்கிறது.

தந்தை கருணாநிதி போலவே: தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் தந்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, திட்டங்களுக்காகவே வாழ்கிற முதல்வர் என புகழ் பெற்றவர். அத்தகைய திட்டங்களை தீட்டியவர். நடைமுறைப்படுத்தியவர். தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற காலங்களில் தொழுநோயாளிகள் மறுவாழ்வுத் திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம், இலவச கண்ணொளி வழங்கும் திட்டம், குடிசை மாற்று வாரியம், குடிநீர் வழங்கல் வாரியம், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு தனி அமைச்சகம், பேருந்துகள் நாட்டுடைமை, கை ரிக்‌ஷாக்கள் ஒழித்து சைக்கிள் ரிக்‌ஷாக்கள் வழங்குதல் என இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்தார். மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் என இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் பக்கம் பார்வையை திருப்பி அவர்களது மேம்பாட்டுக்கான செயல்திட்டங்களை உருவாக்கியவர் கருணாநிதி. சமூக நீதியின் ஆதாரமான இடஒதுக்கீடும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதற்காக இஸ்லாமியர் உள் இடஒதுக்கீடு, அருந்ததியர் உள் இடஒதுக்கீடு என புதிய புதிய ஜன்னல்களை திறந்து வைத்தவர் கருணாநிதி. தந்தை கருணாநிதியின் பாணியில் யாருமே யோசிக்காத, யாருமே சிந்தித்து பார்க்க முடியாத தொலைநோக்கு பார்வையுடனான திட்டங்களை தம்மாலும் உருவாக்கிட முடியும் என்பதை இன்றைய கிக் தொழிலாளர்களுக்கான நலவாரியம் மூலம் பிரகடனம் செய்துள்ளார் ட் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+