அநியாயத்துக்கு கலக்கும் "கலர்புல்" ஸ்டாலின்.. முதல்வரின் செம சைக்கிளிங்.. அசந்துபோன உத்தண்டி
முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் ஓட்டும் போட்டோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன
சென்னை: முதல்வர் ஸ்டாலின், சைக்கிள் ஓட்டும் போட்டோக்கள் மறுபடியும் இணையத்தை ஆக்கிரமித்து கொண்டுவிட்டது.. புது கெட்டப்பில் ஸ்டாலினை பார்ப்பதற்கு படு யூத்தாக காணப்படுகிறார்..!
தமிழக முதல்வர் ஸ்டாலின் எப்போதுமே தன்னுடைய உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் அக்கறை கொண்டவர்... உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள நினைப்பவர்.. அதற்காகவே ஸ்டாலினுக்கு உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் உண்டு.
வீட்டில் தினமும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.. அதேபோல, வாக்கிங், சைக்கிளிங் செய்வதிலும் பேரார்வம் கொண்டவர்.

லாக்டவுன்
இப்போது முதல்வராக பதவியேற்றதற்கு பிறகும்கூட, வாரம்தோறும், ஞாயிற்றுக்கிழமைகளில் கிழக்கு கடற்கரை சாலையில் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்வதை காண முடியும்.. கொரோனா லாக்டவுன் காரணமாக, சில மாதங்களாக சைக்கிள் ஓட்டுவதை தவிர்த்து வந்தார் ஸ்டாலின், பிறகு சென்னையில் தொற்று ஓரளவு குறையும் மறுபடியும் சைக்கிளிங் ஆரம்பித்துள்ளார்..

விழிப்புணர்வு
பொதுவாக முதல்வர் வாக்கிங், ஜாக்கிங் சென்றால், வழியில் பொதுமக்களை சந்தித்து பேசுவதும், அவர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்து கொள்வதும் வழக்கம்.. சைக்கிளிங் மேற்கொள்ளும்போது இந்த பழக்கம் தொடர்ந்து வருகிறது.. வாரத்திற்கு 2 முறை சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் இருந்து மாமல்லபுரம் வரை அதிகாலை நேரத்தில் சைக்கிளில் செல்வார். அதுமட்டுமல்ல, உடற்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுவதன் நன்மைகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு செய்தபடியும் உள்ளார்.

டிரஸ் - கெட்டப்
ஸ்டாலின் எப்போது சைக்கிள் ஓட்டினாலும் அவரது சைக்கிளும், உடையும் மக்களால் கூர்ந்து கவனிக்கப்படும்... சைக்கிள் ஓட்டுவதற்கான டிரஸ், கையில் கிளவுஸ், ஹெல்மெட் அணிந்தபடி ஸ்டாலின் சைக்கிள் ஓட்டிச்செல்வது பலரை ஈர்த்து வருகிறது.. அப்படித்தான் இன்று ஒரு புதுகெட்டப்பில் சைக்கிளில் சென்றுள்ளார் முதல்வர்... மகாபலிபுரம் சாலையில் உத்தண்டி சுங்கச்சாவடி பகுதியில்தான் சைக்கிளில் ஓட்டியுள்ளார்..

போட்டோக்கள்
அப்போது அவருடன் வேறு சிலரும் சைக்கிளிங் செய்துள்ளனர்.. இவ்வளவு பாதுகாப்பு கவசத்துடன் சென்றாலும், வழக்கம்போல் முதல்வரை மக்கள் அடையாளம் கண்டுகொண்டு வணக்கம் தெரிவித்தனர்... அவரும் சைக்கிள் ஓட்டியபடியே பதிலுக்கு வணக்கம் தெரிவித்து பயணத்தை தொடர்ந்தார்... இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..












Click it and Unblock the Notifications