பாஜக சனாதனிகளுக்கு சவால்- திமுக ஆட்சி எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை- முதல்வர் ஸ்டாலின் பிரகடனம்
சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு தந்தை பெரியாருக்கு காணிக்கை என தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமது சமூக வலைதளப் பக்கங்களில் பிரகடனம் செய்துள்ளார்.
தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு வேலூரில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இயக்கங்கள் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னெப்போதும் இல்லாத வகையில் எழுச்சியுடன் கொண்டாடின.

தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெரியார் வழியில் சனாதனத்தை ஒழிப்போம் என பேசியது அகில இந்திய அளவில் பாஜக தலைவர்களால் பெரிதுபடுத்தப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில் பெரியாரின் பிறந்த நாள் தமிழ்நாட்டில் பேரெழுச்சியுடனும் உணர்வுப்பூர்வமாகவும் கொண்டாடப்பட்டது.
சேலத்தில் தந்தை பெரியாரின் சிலைக்கு திமுக இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டு நலன் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சமூக வலைதளப் பக்கங்களில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள பெரியார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தோம். மேலும், பெரியாரின் பிறந்த நாளையொட்டி சமூகநீதி நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டோம். மூட நம்பிக்கைகளை ஒழித்து மானுடம் காக்க பெரியார் வழியில் அயராது உழைப்போம் என பதிவிட்டிருந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்! மொழி, நாடு, மதம் போன்றவற்றைக் கடந்து - மனிதநேயத்தையும் சுயமரியாதையையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை வலியுறுத்திய மாபெரும் சீர்திருத்தவாதி அவர்.
தாம் எண்ணியவை எல்லாம் சட்டவடிவம் பெறுவதைப் பார்த்துவிட்டே மறைந்த பெருமை அவருக்கே உரித்தானது! பெண் விடுதலைக்காகவும் சமத்துவச் சமுதாயத்துக்காகவும் நாம் இன்று தீட்டும் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படை பெரியாரியலே!

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் ஆட்சியைப் போன்றே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சியும் எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை! இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications