ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி
சென்னை: மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது, ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்துக்கு இருவரும் ஆறுதல் தெரிவித்தனர். முன்னதாக, மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் பண்பாளர்; அவரது மறைவு தனிப்பட்ட முறையில் தமக்கு வேதனையைத் தருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடநலக் குறைவால் காலமானார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உடல்நலன் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த தகவல் அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு சென்று ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் நலம் குறித்து விசாரித்திருந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலமானார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தோழர்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
மேலும், மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக் கூடிய பண்பாளர். மகன் மறைவால் கவலையடைந்த நிலையிலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றியவர்; மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னதாக என்னை சந்திக்க வேண்டும் என விரும்பினார். அவர் எதற்காக என்னை சந்திக்க வேண்டும் என்பதை உணர்ந்தும் இருக்கிறேன். ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு தனிப்பட்ட முறையிலும் வேதனை தருகிறது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தி உள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி வெளியிட்ட இரங்கல்: தந்தை பெரியார் அவர்களின் பெயரனும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மறைவு தாங்கொணா துயரத்தைத் தருகிறது .
பெரியாரின் அண்ணன் ஈ.வி.கிருஷ்ணசாமி அவர்களின் மகனும், பேரறிஞர் அண்ணாவின் நெஞ்சங் கவர்ந்த தம்பியுமான ஈ.வெ.கி.சம்பத் அவர்களின் அருமை மகன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் பழகுவதற்கு இனிய பண்பாளர். கொண்ட கொள்கையில் உறுதியானவர். காங்கிரஸ் இயக்கத்தின் சுயமரியாதை தலைவர் என்று சொல்லத்தக்க அளவுக்கு காங்கிரஸ் கட்சியில் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக் கொண்டு, தமிழ்நாட்டில் கட்சியை வழிநடத்துகின்ற தலைவராக உயர்ந்தவர்.
சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றியவர். டாக்டர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பொறுப்பினை ஏற்று தனது ஆளுமைத் திறனை வெளிப்படுத்தியவர். தமிழ்நாட்டில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வலிமையோடு எடுத்துச் செல்வதற்கு எவருக்கும் அஞ்சாமல் கருத்துக்களை முன்வைத்த சிறப்பு அவருக்கு உண்டு.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் அவர் போட்டியிட்ட பொழுது நான் பரப்பரை மேற்கொள்ள வேண்டும் என்று பெரிதும் விரும்பி அழைத்தார்.
இளங்கோவன் அவர்களின் 70ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று வாழ்த்தினேன்.
கடந்த மாதம் இறுதியில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது எப்படியும் குணமாகி மீண்டு வருவார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் அவர் மூச்சுக்காற்று இயற்கையோடு கலந்துவிட்டது. அன்பு சகோதரர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தகைசால் தலைவரை இழந்த காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
நேரில் அஞ்சலி: இதனிடையே சென்னையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர். அப்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்துக்கு இருவரும் ஆறுதல் தெரிவித்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications