வெளிநாட்டுப் பயணங்கள் தொடருமா? 'நறுக்கென' கேட்ட நிருபர்கள்! முதல்வர் ஸ்டாலின் 'நச்' பதில்!
சென்னை: தமிழகத்தின் வளர்சிக்கும், வேலைவாய்ப்பை பெருக்கவும் வேறு நாடுகளிலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழல் அமைந்தால் நிச்சயம் அந்த வாய்ப்பை தாம் பயன்படுத்துவேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் தமது பயணம் தொடரும் என்பதை சூசகமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதில்களும் பின்வருமாறு;
கேள்வி: துபாயில் உள்ள தொழிலதிபர்களுக்கு இங்கு வந்து தொழில் தொடங்குவதற்கு எந்த அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது? இங்கு வந்து தொழில் தொடங்குவதற்கு அவர்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறீர்கள்?
முதலமைச்சர்: ஒப்பந்தம் நேரடியாக கையெழுத்திட்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் தொடங்கினீர்கள் என்றால் எல்லா விதமான சலுகைகளும் முறையான வகையில் தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலையையும் நிச்சயமாக உருவாக்கித் தருகிறோம் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறோம். அவர்களும் அந்த நம்பிக்கையுடன் தான் இருக்கிறார்கள்.

கேள்வி: இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் தொழில் வடிவம் எத்தனை மாதங்களில் வரும்?
முதலமைச்சர்: ஒரு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்து ஒப்பந்தம் கையெழுத்திட்டிருக்கிறோம். அதுதான் சொன்னேன், நாங்கள் ஒப்பந்தம் போட்டிருக்கிற தேதிக்கு முன்பே அந்தத் தொழிலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து வேலைவாய்ப்பை நிச்சயமாக உருவாக்கித் தருவோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
கேள்வி: உங்களுடைய பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் எல்லாம் பல குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள், அதைப் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
முதலமைச்சர்: அவர்கள் எதிர்க் கட்சி, அப்படித்தான் சொல்வார்கள். நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவது கிடையாது.

கேள்வி: தொடர்ச்சியாக இப்பொழுது ஐக்கிய அரபு நாடுகளில் சென்றது போல, வேறு நாடுகளுக்குச் சென்று, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது?
முதலமைச்சர்: தொழில் தொடங்கக்கூடிய சூழ்நிலையில், வேலைவாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நிச்சயமாக அப்படி ஒரு சூழ்நிலை வருகிற போது நான் நிச்சயமாக பயன்படுத்துவேன், அதில் எந்த சந்தேகமும் இல்லை.
-
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
மக்களின் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு கால்ஷீட் எப்போது? சவடால் விட்டீங்களே?விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications