Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமத்துவத்தின் திருவுருவம்..அய்யா வைகுண்டர் வழி நடக்க உறுதியேற்போம்..முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சமத்துவத்தின் திருவுருவாய் விளங்கிய அய்யா வைகுண்டரை போற்றி, அவர் காட்டிய நல்வழி நடக்க உறுதியேற்போம் என்று முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் என்றும்; எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே என்றும் அனைவருக்குமான அறத்தையும், அன்பையும் போதித்துச் சமத்துவத்தின் திருவுருவாய் விளங்கிய அய்யா வைகுண்டரின் 191ஆவது பிறந்தநாளில் அவரைப் போற்றி, அவர் காட்டிய நல்வழி நடக்க உறுதியேற்போம் என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Tamil Nadu CM MK Stalin Tweet Swamithoppu Ayya Vaikundar 191 avatharam day

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அய்யாவைகுண்டரின் பிறந்த நாளான மாசி மாதம் 20ம் தேதி, அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவாக அய்யாவழி சமூகத்தினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி அய்யா வைகுண்டரின் 191வது அவதார தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது.

திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் அய்யா வைகுண்டர் 191வது அவதார தின விழா நடைபெற்றது. இன்று அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல் அபயம் பாடுதல் காலை 6.50 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அவதார தின விழா பணிவிடையும் அன்னதர்மம் நடைபெற்றது.

அய்யாவின் அவதார தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி, துாத்துக்குடி, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்,கேரளாவில் இருந்தும் நேற்றே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாகர்கோவில் வந்தனர். தொடர்ந்து இன்று அதிகாலை நாகர்கோவில் நாகராஜாகோவிலில் இருந்து சுவாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் தலைமை பதி நோக்கி அய்யா அவதார தினவிழா பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. பேரணியின் முன்பாக அய்யாவின் 'அகிலதிரட்டு' புத்தகத்தை, காவிக்கொடி பக்தர்கள் பூப்பல்லக்கில் எடுத்து சென்றனர்.

கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், தென்தாமரைகுளம் வழி ஊர்வலம் சுவாமித்தோப்பு சென்றடைந்த இந்த பேரணியில் முத்துக்குடைகள், மேலதாளங்கள் இடம்பெற்றிருந்தன. பேரணியில் இடம்பெற்றிருந்த குழந்தைகளின் கோலாட்டம் வழிநெடுகிலும் கூடி இருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர். விஜய்வந்த் ஊர்வலத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார், மேலும் கோட்டார் சவேரியார் ஆலய நிர்வாகம் பாரம்பரியமாக அய்யா அவதார தின ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் குருமார்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைப்பெற்றது, மேலும் இந்த வழக்கம் தொன்று தொட்டு நடந்து வருவதாகவும்,இந்த விழாவை சமய நல்லிணக்க விழாவாக கருதவதாகவும் அருள்தந்தை. ஸ்டான்லி சகாயசீலன் தெரிவித்தார்.

அய்யா வைகுண்டர் அவதார தின பேரணியை முன்னிட்டு நாகர்கோவில் முதல் சுவாமிதோப்பு வரையிலான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவடத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

Tamil Nadu CM MK Stalin Tweet Swamithoppu Ayya Vaikundar 191 avatharam day

அய்யாவின் அவதார தினத்தை முன்னிட்டு ராஜ்பவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆளுநர் ரவி, அய்யா வைகுண்டரின் பிறந்த தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்தினார். சமூக தீமைகளுக்கு எதிராக போராடி, ஒவ்வொரு மனிதனுக்கும் சமத்துவத்தையும் கண்ணியத்தையும் பரப்புவதன் மூலம் சமூகத்தை ஒருங்கிணைத்த அவர் ஒரு சிறந்த ஆன்மிக தலைவர் புரட்சிகர சிந்தனையாளர் என ராஜ்பவன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Tamil Nadu CM MK Stalin Tweet Swamithoppu Ayya Vaikundar 191 avatharam day

அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் என்றும்; எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே என்றும் அனைவருக்குமான அறத்தையும், அன்பையும் போதித்துச் சமத்துவத்தின் திருவுருவாய் விளங்கிய அய்யா வைகுண்டரின் 191ஆவது பிறந்தநாளில் அவரைப் போற்றி, அவர் காட்டிய நல்வழி நடக்க உறுதியேற்போம் என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+