கோட்டையே குலுங்குது.. "நான் மாறமாட்டேன்".. ஸ்டாலின் சொன்னதுமே ஒரே குஷி.. விரைவில் வருகிறது அறிவிப்பு
சென்னை: ஊதிய உயர்வு எப்போது வரும் என்று ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கும், தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒரு குட்நியூஸ் வரப்போகிறது.. இதுகுறித்து தகவல் ஒன்று பிரத்யேகமான நமக்கு கிடைத்திருக்கிறது.
தங்களது கோரிக்கைகள் எதையுமே எதுவுமே இதுவரை அரசு நிறைவேறவில்லை என்ற வருத்தத்திலும், அதிருப்தியிலும் அரசு ஊழியர்கள் உள்ளதாக தெகிறது. அதனால்தான், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுத்து வருகிறார்கள்.

கோரிக்கைகள்: இதுபோக, 4 சதவீத அகவிலைப்படி உயர்வு கேட்டு எதிர்பார்ப்பிலும் காத்திருக்கிறார்கள்.. இதற்குநடுவில் ஜாக்டோ ஜியோவும் போராட்டத்தை அறிவித்திருக்கிறது. போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறையினரும் போனஸ் கேட்டு, தொடர்ந்து வேண்டுகோள்களை விடுத்தபடியே உள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த அனைத்து விஷயங்களுமே கோட்டைக்கு கொண்டுபோகப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்பெஷல் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
அதாவது, தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், அரசு ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தலைமையகத்தில் நடந்திருக்கிறது.. தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் முன்னாள் தலைவர் முனைவர் பீட்டர் அந்தோனிசாமி, அரசு அலுவலர் ஒன்றியத்தின் தலைவர் அமிர்தகுமார் ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.
முக்கிய விவாதம்: அப்போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன.. அதேபோல, நிலுவையில் உள்ள பல உரிமை சார்ந்த பிரச்சனைகளும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கூட்டமைப்பில் இணைந்துள்ள பல்வேறு சங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு தங்களின் பிரச்சனைகளை விவரித்தார்கள்.
கூட்டத்தின் முடிவில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கொரோனா காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பின் பணபலன்களை வழங்க வேண்டும், 7வது ஊதியக்குழு மாற்றத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட நிலுவைத் தொகையையும், அகவிலைப்படி உயர்வினை அறிவிக்கப்பட்டபோது நடந்த காலதாமத நிலுவை தொகையையும் வழங்க வேண்டும், காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புதல், அரசு பணியாளர்களுக்கான பதவி உயர்வினை வழங்குதல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
தீர்மானங்கள்: பிறகு, இந்த தீர்மானங்களையெல்லாம், முனைவர் பீட்டர் அந்தோணிசாமி, தலைவர் அமிர்தகுமார் தலைமையிலான குழு , தமிழக முதல்வர் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து ஒப்படைத்திருக்கிறார்கள்..
அந்த கோரிக்கைகளை படித்து பார்த்த முதல்வர் ஸ்டாலின், "இதெல்லாம் நியாயமான கோரிக்கைகள்தான். அரசுக்கு இருக்கும் நிதி நெருக்கடி, உங்களுக்குத் தெரியாததல்ல.. இருந்தாலும், உங்கள் கோரிக்கையினை படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றித் தருகிறேன். நான் வாக்கு கொடுத்தால் மாறமாட்டேன் என்பது உங்களுக்கு தெரியும். அதனால், நிச்சயம் நிறைவேற்றித் தருகிறேன்" என்று பீட்டர் அந்தோனிசாமியிடமும், அமிர்தகுமாரிடம் உறுதி தந்திருக்கிறாராம் ஸ்டாலின்.
தீவிர ஆலோசனை: அதுமட்டுமல்ல, இந்த கோரிக்கையின் முதல்கட்டமாக, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பின் பணபலன்களை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை நிறைவேற்ற ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறாராம்.. இந்த கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு எவ்வளவு கூடுதல் செலவாகும் என்பதை உயரதிகாரிகளிடமும் விவாதித்துள்ளார் ஸ்டாலின்.
அதற்கு அதிகாரிகள், "இதனை நிறைவேற்றுவதால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவை சமாளித்து விட முடியும்" என்று முதல்வருக்கு பெருத்த நம்பிக்கையை தெரிவித்திருக்கிறார்களாம்..
செம குஷி: இந்த விபரங்களையெல்லாம் கேள்விப்பட்டு படுஉற்சாகத்தில் இருக்கிறார்கள் அரசு ஊழியர்கள்.. ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பதன் மூலம் கிடைக்கும் பணபலன்களை வழங்கும் உத்தரவு விரைவில் வெளியாகும் என்கிற தகவல்கள் கோட்டையிலிருந்து நமக்கு கிடைக்கின்றன. ஆக, இவர்கள் 2 பேரும் எடுத்த முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளதாக தெரிகிறது..!!












Click it and Unblock the Notifications