Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது.." டெல்லி மல்யுத்த வீராங்கனைகள் கைது.. முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லியில் போராடிய வீரர், வீராங்கனைகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பல்வேறு வீராங்கனைகள் பாலியல் புகார்களை முன்வைத்துள்ளனர். கடந்த ஜன. மாதமே இது குறித்து வீரர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

அப்போது இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மேரி கோம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், அதன் பின்னர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து இம்மாத தொடக்கத்தில் மீண்டும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தைத் தொடங்கினர்.

 Tamil Nadu CM Stalin condemns arrest of protesting wrestlers in delhi

வழக்கு:

அவர் மீது வீராங்கனைகள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த போதிலும் முதலில் போலீசார் அந்த புகாரைப் பெற்றுக் கொள்ளவில்லை. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பின்னரே போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர்.

இன்று புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் நிலையில், அங்கே போராட்டம் நடத்தப் போவதாக மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்தனர். நாடாளுமன்றத்திற்கு முன்பு மகிலா மகா பஞ்சாயத்து எனப்படும் பெண்கள் சபையை நடத்த உள்ளதாக அறிவித்தனர். இதற்கு விவசாயிகளும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் அங்குப் பரபர சூழல் உருவானது. இதையடுத்து பாதுகாப்பு கருதி இன்று டெல்லி எல்லைகள் மூடப்பட்டன.

 Tamil Nadu CM Stalin condemns arrest of protesting wrestlers in delhi

இழுத்துச் செல்லப்பட்டு கைது:

இந்தச் சூழலில் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். அங்கே வைக்கப்பட்டிருந்த தடுப்புகளைத் தாண்டி அவர்கள் செல்ல முயன்றனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் நாட்டிற்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கை போலீசார் சுற்றி வளைத்து இழுத்துச் சென்றனர். இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராகவும் பாஜக எம்பியாகவும் இருக்கும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்காமல் போராடும் நமது மல்யுத்த வீரர், வீராங்கனைகளை இப்படி நடத்துவது ரொம்பவே தவறான நடவடிக்கை என்றே பலரும் விமர்சித்தனர்.

 Tamil Nadu CM Stalin condemns arrest of protesting wrestlers in delhi

முதல்வர் ஸ்டாலின்:

இதற்கிடையே இந்தச் சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது ட்விட்டரில், "பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள்.

இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் - தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா?" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இன்று நாடாளுமன்றம் திறக்கப்பட்ட நிலையில், அங்கே தமிழக ஆதீனங்கள் கொடுத்த செங்கோல் வைக்கப்பட்டது. அதைக் குறிப்பிட்டே முதல்வர் ஸ்டாலின் இப்போது ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+