Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் ஒரே வழி.. அடுத்தடுத்து குறி வைக்கப்படும் அமைச்சர்கள்.. புது ஆண்டில்.. ஸ்டாலினின் புது பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் திமுக அமைச்சர்களுக்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கியமான ஆலோசனை ஒன்றை நடத்தி இருக்கிறாராம்.

ஆளும் திமுக அமைச்சர்கள் பலர் அடுத்தடுத்து சிறைக்கு செல்ல தொடங்கி உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே சிறையில் இருக்கிறார். அதேபோல் அமைச்சர் பொன்முடிக்கு தற்போது 3 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டு உள்ளது. இது போக அமைச்சர் ஏ வ வேலு, தங்கம் தென்னரசு என்று பல அமைச்சர்களுக்கு எதிராக முக்கிய வழக்குகள் இருக்கின்றன. இந்த வழக்குகள் வரும் 3ம் தேதி முதல் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

Tamil Nadu CM Stalins new plan on the new year after the Minister Ponmudis conviction in MHC

சொத்து குவிப்பு குற்றவாளி: சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

வழக்கு பின்னணி; இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 19ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, தண்டனை விவரங்களை தெரிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்திருந்தார். வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அவர்களிடம் தண்டனை விவரம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தீர்ப்பு என்ன: அப்போது பொன்முடி தரப்பில் ஆஜராக இருந்த மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ, இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருவரின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தார். மருத்துவ அறிக்கை ஆய்வு செய்த நீதிபதி இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அவகாசம்: மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 30 நாட்கள் அவகாசத்திற்கு பின் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது பொன்முடி தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே இந்த வழக்கில் சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக 2011 ஆம் ஆண்டு சட்டத்துறை செயலாளராக இருந்த தாங்கள் (நீதிபதி ஜெயச்சந்திரன்) தான் உத்தரவு பிறப்பித்ததாக சுட்டிக்காட்டினார். அதற்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் முன் நடந்த நிகழ்வு அது என்று நீதிபதி பதிலளித்தார். இந்த வழக்கில்தான் பொன்முடிக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

அமைச்சரவை மாற்றம்: தமிழ்நாட்டில் ஆளும் திமுக அமைச்சர்களுக்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கியமான ஆலோசனை ஒன்றை நடத்தி இருக்கிறாராம். அதன்படி வழக்குகளை எதிர்கொள்ள புதிய வழக்கறிஞர்களை நியமிப்பது, அதேபோல் புதிய அமைச்சர்களை உள்ளே கொண்டு வருவது உள்ளிட்ட திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் உள்ளாராம். இது தொடர்பான ஆலோசனைகளைத்தான் மேற்கொண்டு உள்ளாராம்.

சீனியர்கள் பலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால்.. முதல்வர் ஸ்டாலின் மொத்தமாக ஆட்டத்தை கலைத்து ஆடும் திட்டத்தில் இருக்கிறாராம். இதனால் 2024 லோக்சபா தேர்தல் வருவதற்கு முன்.. அல்லது முடிந்த சில வாரங்களில் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீனியர்களாக இருக்கும் 10 அமைச்சர்களைத்தான் டெல்லி டார்கெட் செய்கிறது. அப்படித்தான் செந்தில் பாலாஜியை டார்கெட் செய்தனர். தற்போது ஏவ வேலுவை டார்கெட் செய்கின்றனர். இடையில் பொன்முடியை டார்கெட் செய்தனர். இப்படி சீனியர்களாக இருக்கும் 10 பேரைத்தான் டார்கெட் செய்து வருகின்றனர். சீனியர்களாக இருக்கும் நபர்கள்தான் டெல்லியின் பொறியில் சிக்கி உள்ளனர். இவர்களை அடுத்தடுத்து கைது கூட செய்ய வாய்ப்புகள் உள்ளன.

சீனியர்களை கைது செய்து மொத்தமாக கட்சியை முடக்கும் திட்டங்களில் இவர்கள் ஈடுபடலாம். அதனால் ஆட்சிக்கு கெட்ட பெயர் வரும். தேர்தல் நேரத்தில் பாஜக இந்த திட்டத்தை களமிறக்க நினைக்கலாம். இப்படி செய்து ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தலாம். திமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தலாம் என்று நினைக்கலாம். அதற்கு பதிலடி தரும் விதமாக ஸ்டாலின் மனதில் இன்னொரு திட்டம் உள்ளது. ஸ்டாலின் மனதில் பெரிய திட்டம் ஒன்று இருக்கிறது.

இதற்கெல்லாம் பதிலடி கொடுக்க ஸ்டாலின் திட்டத்தின் படி முதலில் இருக்கும் 10 சீனியர்களை பார்ட்டி வேலைக்கு இறக்கலாம். தேர்தல் பணிகளை கொடுக்கலாம். மந்திரி பதவிகளை பறிக்கலாம். அவர்களை கட்சியில் முன்னுக்கு கொண்டு வரலாம். இளம் நபர்களை அமைச்சர்கள் ஆக்கலாம். சீனியர்களுக்கு கட்சியில் முன்னுரிமை. இளம் எம்எல்ஏக்களுக்கு அமைச்சர்கள் பதவிகள். இளைஞர்களை அமைச்சர் பதவிக்கு கொண்டு வந்து மாற்றம் செய்யலாம் என்று ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+