சென்னை: மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புக்காக 4 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் விஜய்யின் பிரச்சாரம் தொடர்பாக பிரத்யேகமான நொடிக்கு நொடி அப்டேட்களை ஒன் இந்தியா தமிழ் நேரலை பக்கத்தில் பார்க்கலாம்.
Sep 25, 2026, 4:03 pm IST
என் தாயை தவறாக பேசியதை கூட பொறுத்துக் கொண்டேன். ஆனால் வீரமணி பாலியல் வழக்கு தொடர்பாக ஸ்டாலின் வாயை திறக்க வேண்டும். இதில் கூட அதிமுக வாய் திறக்கவில்லை. இதில் கூடவா கூட்டாக இருப்பீர்கள்.. சிறுமிகளின் வலியை கூட பேச முடியவில்லை என்றால், என்ன அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள். திமுக, அதிமுகவுக்கு மக்கள் புகட்டி ஆக வேண்டும்: விஜய்
Sep 25, 2026, 3:57 pm IST
எப்போது பார்த்தாலும் பாஜக உள்ளே வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். டெல்லியில் இருக்கும் திமுக பெயர் தான் பாஜக.. தமிழ்நாட்டில் இருக்கும் பாஜக பெயர் தான் திமுக.. திமுக, பாஜக, அதிமுக இடையே ரகசிய கூட்டணி.. தைரியம் இருந்தால் திமுக, அதிமுக, பாஜக மூவரும் ஒன்றாக வரலாமே? இந்த ஆட்சி கலையும் என்று பேசுவதா? : முதல்வர் விஜய்
Sep 25, 2026, 3:52 pm IST
தவெக - திமுக இடையில் போட்டி என்பதை இப்போது அவர்களே சொல்ல தொடங்கிவிட்டார்கள். பவளவிழா கட்சியின் பண்ணையார் வீட்டுக் குழந்தையுடன் தான் நமக்கு போட்டி.. ஆட்சியை கவிழ்க்கலாம் என்று கணக்கு போடுகிறார்கள். உங்களால் ஒன்றும் கிழிக்க முடியாது: முதல்வர் விஜய்
Sep 25, 2026, 3:49 pm IST
ஊழல் செய்த கூட்டத்தை விட மாட்டோம். தடித்த தோலுக்கு சொந்தக்காரன் நான்.. எல்லாவற்றையும் 34 ஆண்டுகளாக பார்த்துவிட்டு வந்துள்ளேன். திமுகவினரால் ஊழல் செய்ய மாட்டோம் என்று சொல்ல முடியுமா? ரெண்டே ரெண்டு பேருக்கு மட்டும் தான் போட்டி.. தூயசக்தி தவெகவுக்கும், தீயசக்தி திமுகவுக்கும் தான் போட்டியே: விஜய்
Sep 25, 2026, 3:44 pm IST
திமுகவின் கிளைக் கழகமாகவே அதிமுக மாறிவிட்டது. ஊழல் என்று சட்டசபையில் பேசினால், உடனே கோபம் வந்துவிடும். ஊழல் என்ற உடன் ஆதாரத்தை கேட்கிறது திமுக.. என்னை சட்டசபையில் பேச விடக்கூடாது என்பதே அவர்களின் நோக்கம். 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஊழல் பற்றியெல்லாம் விஜய் பேசுகிறானே என்று அவதூறாக பேசுகிறார்கள்: விஜய்
Sep 25, 2026, 3:42 pm IST
இந்த இடைத்தேர்தல் என் தங்கை மரகதம் குமரவேலுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்: முதல்வர் விஜய் பேச்சு. முதல்முறையாக தவெக வேட்பாளரின் பெயரை கூறி வாக்கு சேகரித்த விஜய்..
Sep 25, 2026, 3:42 pm IST
உங்கள் வீட்டுப்பிள்ளையாகவே வந்துள்ளேன்.. ஏன் இந்த விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? திமுக ஏன் ஆபாசமாக பேசுகிறது.. ஜெயலலிதாவை அன்று ஸ்டாலின் அவதூறாக பேசினார். ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இப்படிதான் பேசுகிறார்கள். திமுகவுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுப்பது மற்றும் பலர்.. மற்றும் பலர் என்றால் அதிமுக: விஜய் பேச்சு
Sep 25, 2026, 3:34 pm IST
திமுகவினரே.. மூத்தவர்களே.. ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.. பருப்புல உசந்தது முந்திரி.. பதவியில் உசந்தது மந்திரி.. எங்க அண்ணன் தமிழ்நாட்டின் முதல் மந்திரி: தவெக மாவட்டச் செயலாளர் பாலாஜி
Sep 25, 2026, 3:32 pm IST
எம்ஜிஆர் தோட்டத்தில் வேலை செய்தவர் என் தந்தை.. எம்ஜிஆரால் பெயர் சூட்டப்பட்டவள் நான்.. எம்ஜிஆரின் உப்பை சாப்பிட்டிருக்கிறோம்.. மதுராந்தகம் தொகுதி மக்களுக்காகவே ராஜினாமா செய்தேன். விஜய்யை நம்பியே தவெகவில் இணைந்தேன். நான் எதற்காக பெட்டி வாங்க வேண்டும். விஜய் ஏன் எனக்கு பெட்டி கொடுக்கப் போகிறார். குதிரை பேரத்தில் தவெக ஈடுபடவில்லை: மரகதம் குமரவேல்
Sep 25, 2026, 3:28 pm IST
நான் எங்கு பிரச்சாரம் சென்றாலும், திமுக மற்றும் அதிமுக ராஜினாமா தொடர்பாக குற்றம்சாட்டுகிறார்கள். இந்த நேரத்தில் எனக்கு கை கொடுத்து, நான் இருக்கிறேன் என்று விஜய் நம்பிக்கை கொடுத்துள்ளார். நான் எம்எல்ஏ பதவியை ஏன் ராஜினாமா செய்தேன் என்று அனைவருக்கும் தெரியும். திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க அதிமுக முயற்சித்தது: மரகதம் குமரவேல்
Sep 25, 2026, 3:09 pm IST
மரகதம் குமரவேல் சிறந்த வேட்பாளர்.. சிறந்த சகோதரி.. மதுராந்தகம் பிரச்சாரத்தின் போது, இந்தியாவுக்கு 1947லேயே சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால் தமிழ்நாட்டிற்கு 2026ல் தான் சுதந்திரம் கிடைத்தது என்று மூதாட்டி ஒருவர் கூறினார். மதுராந்தகம் தொகுதியின் காப்பாளர் மரகதம் குமரவேல். அவர் விஜய்யின் தங்கை என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்: அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்
Sep 25, 2026, 3:05 pm IST
தவெக கூட்டத்தின் மேடைக்கு முதல்வர் விஜய் வந்துவிட்டார். தவெக கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தவெகவின் மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் குமரவேலை விஜய் அறிமுகம் செய்துள்ளார். மதுராந்தகம் தொகுதிக்கு வந்த விஜய்க்கு வேல் கொடுத்து மரகதம் குமரவேல் வரவேற்று இருக்கிறார்.
Sep 25, 2026, 2:40 pm IST
மதுராந்தகம் அருகே ஆத்தூர் பகுதியில் தவெக கூட்டம் நடக்கும் திடலுக்கு முதல்வர் விஜய் வந்துவிட்டார். அவருக்கு அமைச்சர்கள் மரிய வில்சன், காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் வரவேற்பு அளித்தனர். இன்னும் சற்று நேரத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
Sep 25, 2026, 2:00 pm IST
மதுராந்தகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து இடைத்தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் விஜய் தொடங்கி இருக்கிறார். விஜய் வரும் வழி நெடுகிலும் தவெக தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
Sep 25, 2026, 1:58 pm IST
முதல்வர் விஜய் மீண்டும் வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்து மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். தவெக பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில் விஜய் வந்துள்ளார். எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்த வேனில் இருந்து இறங்கி வந்த முதல்வர் விஜய்யை, தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வரவேற்றார்.
Sep 25, 2026, 1:52 pm IST
கரூர் சம்பவத்தை போல் மீண்டும் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு, திருவள்ளூர் மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். காவல்துறையினர் பலரும் சீருடையின்றியும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
Sep 25, 2026, 12:45 pm IST
முதல்வர் விஜய்யின் பிரச்சாரத்தில் பங்கேற்போருக்கு கூல் டிரிங்ஸ், மிக்சர் உள்ளிட்ட ஸ்னாக்ஸ் பையுடன் விசிலும் கொடுக்கப்படுகிறது. முதல்வர் விஜய்யை காண 5 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். விஜய்யும் மதுராந்தகம் பிரச்சாரத்திற்கு பயணத்தை தொடங்கிவிட்டார்.
Sep 25, 2026, 12:11 pm IST
மதுராந்தகம் இடைத்தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று மாலை அச்சிறுப்பாக்கம் செல்லும் முதல்வர் விஜய், மதுராந்தகம் நகரப்பகுதி வழியாக காரில் பயணிப்பதால் காலை முதலே பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 5 ஆயிரம் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் பாதுகாப்புக்காக சுமார் 4 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொண்டர்களின் எண்ணிக்கைக்கு நிகராக போலீசாரின் எண்ணிக்கை இருப்பது விவாதமாகி இருக்கிறது
12:11 PM, 25 Sep

12:45 PM, 25 Sep
முதல்வர் விஜய்யின் பிரச்சாரத்தில் பங்கேற்போருக்கு கூல் டிரிங்ஸ், மிக்சர் உள்ளிட்ட ஸ்னாக்ஸ் பையுடன் விசிலும் கொடுக்கப்படுகிறது. முதல்வர் விஜய்யை காண 5 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். விஜய்யும் மதுராந்தகம் பிரச்சாரத்திற்கு பயணத்தை தொடங்கிவிட்டார்.
1:52 PM, 25 Sep
கரூர் சம்பவத்தை போல் மீண்டும் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு, திருவள்ளூர் மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். காவல்துறையினர் பலரும் சீருடையின்றியும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
1:58 PM, 25 Sep
முதல்வர் விஜய் மீண்டும் வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்து மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். தவெக பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில் விஜய் வந்துள்ளார். எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்த வேனில் இருந்து இறங்கி வந்த முதல்வர் விஜய்யை, தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வரவேற்றார்.
2:00 PM, 25 Sep
மதுராந்தகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து இடைத்தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் விஜய் தொடங்கி இருக்கிறார். விஜய் வரும் வழி நெடுகிலும் தவெக தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
2:40 PM, 25 Sep
மதுராந்தகம் அருகே ஆத்தூர் பகுதியில் தவெக கூட்டம் நடக்கும் திடலுக்கு முதல்வர் விஜய் வந்துவிட்டார். அவருக்கு அமைச்சர்கள் மரிய வில்சன், காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் வரவேற்பு அளித்தனர். இன்னும் சற்று நேரத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
3:05 PM, 25 Sep
தவெக கூட்டத்தின் மேடைக்கு முதல்வர் விஜய் வந்துவிட்டார். தவெக கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தவெகவின் மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் குமரவேலை விஜய் அறிமுகம் செய்துள்ளார். மதுராந்தகம் தொகுதிக்கு வந்த விஜய்க்கு வேல் கொடுத்து மரகதம் குமரவேல் வரவேற்று இருக்கிறார்.
3:09 PM, 25 Sep
மரகதம் குமரவேல் சிறந்த வேட்பாளர்.. சிறந்த சகோதரி.. மதுராந்தகம் பிரச்சாரத்தின் போது, இந்தியாவுக்கு 1947லேயே சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால் தமிழ்நாட்டிற்கு 2026ல் தான் சுதந்திரம் கிடைத்தது என்று மூதாட்டி ஒருவர் கூறினார். மதுராந்தகம் தொகுதியின் காப்பாளர் மரகதம் குமரவேல். அவர் விஜய்யின் தங்கை என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்: அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்
3:28 PM, 25 Sep
நான் எங்கு பிரச்சாரம் சென்றாலும், திமுக மற்றும் அதிமுக ராஜினாமா தொடர்பாக குற்றம்சாட்டுகிறார்கள். இந்த நேரத்தில் எனக்கு கை கொடுத்து, நான் இருக்கிறேன் என்று விஜய் நம்பிக்கை கொடுத்துள்ளார். நான் எம்எல்ஏ பதவியை ஏன் ராஜினாமா செய்தேன் என்று அனைவருக்கும் தெரியும். திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க அதிமுக முயற்சித்தது: மரகதம் குமரவேல்
3:32 PM, 25 Sep
எம்ஜிஆர் தோட்டத்தில் வேலை செய்தவர் என் தந்தை.. எம்ஜிஆரால் பெயர் சூட்டப்பட்டவள் நான்.. எம்ஜிஆரின் உப்பை சாப்பிட்டிருக்கிறோம்.. மதுராந்தகம் தொகுதி மக்களுக்காகவே ராஜினாமா செய்தேன். விஜய்யை நம்பியே தவெகவில் இணைந்தேன். நான் எதற்காக பெட்டி வாங்க வேண்டும். விஜய் ஏன் எனக்கு பெட்டி கொடுக்கப் போகிறார். குதிரை பேரத்தில் தவெக ஈடுபடவில்லை: மரகதம் குமரவேல்
3:34 PM, 25 Sep
திமுகவினரே.. மூத்தவர்களே.. ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.. பருப்புல உசந்தது முந்திரி.. பதவியில் உசந்தது மந்திரி.. எங்க அண்ணன் தமிழ்நாட்டின் முதல் மந்திரி: தவெக மாவட்டச் செயலாளர் பாலாஜி
3:42 PM, 25 Sep
உங்கள் வீட்டுப்பிள்ளையாகவே வந்துள்ளேன்.. ஏன் இந்த விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? திமுக ஏன் ஆபாசமாக பேசுகிறது.. ஜெயலலிதாவை அன்று ஸ்டாலின் அவதூறாக பேசினார். ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இப்படிதான் பேசுகிறார்கள். திமுகவுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுப்பது மற்றும் பலர்.. மற்றும் பலர் என்றால் அதிமுக: விஜய் பேச்சு
3:42 PM, 25 Sep
இந்த இடைத்தேர்தல் என் தங்கை மரகதம் குமரவேலுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்: முதல்வர் விஜய் பேச்சு. முதல்முறையாக தவெக வேட்பாளரின் பெயரை கூறி வாக்கு சேகரித்த விஜய்..
3:44 PM, 25 Sep
திமுகவின் கிளைக் கழகமாகவே அதிமுக மாறிவிட்டது. ஊழல் என்று சட்டசபையில் பேசினால், உடனே கோபம் வந்துவிடும். ஊழல் என்ற உடன் ஆதாரத்தை கேட்கிறது திமுக.. என்னை சட்டசபையில் பேச விடக்கூடாது என்பதே அவர்களின் நோக்கம். 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஊழல் பற்றியெல்லாம் விஜய் பேசுகிறானே என்று அவதூறாக பேசுகிறார்கள்: விஜய்
3:49 PM, 25 Sep
ஊழல் செய்த கூட்டத்தை விட மாட்டோம். தடித்த தோலுக்கு சொந்தக்காரன் நான்.. எல்லாவற்றையும் 34 ஆண்டுகளாக பார்த்துவிட்டு வந்துள்ளேன். திமுகவினரால் ஊழல் செய்ய மாட்டோம் என்று சொல்ல முடியுமா? ரெண்டே ரெண்டு பேருக்கு மட்டும் தான் போட்டி.. தூயசக்தி தவெகவுக்கும், தீயசக்தி திமுகவுக்கும் தான் போட்டியே: விஜய்
3:52 PM, 25 Sep
தவெக - திமுக இடையில் போட்டி என்பதை இப்போது அவர்களே சொல்ல தொடங்கிவிட்டார்கள். பவளவிழா கட்சியின் பண்ணையார் வீட்டுக் குழந்தையுடன் தான் நமக்கு போட்டி.. ஆட்சியை கவிழ்க்கலாம் என்று கணக்கு போடுகிறார்கள். உங்களால் ஒன்றும் கிழிக்க முடியாது: முதல்வர் விஜய்
3:57 PM, 25 Sep
எப்போது பார்த்தாலும் பாஜக உள்ளே வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். டெல்லியில் இருக்கும் திமுக பெயர் தான் பாஜக.. தமிழ்நாட்டில் இருக்கும் பாஜக பெயர் தான் திமுக.. திமுக, பாஜக, அதிமுக இடையே ரகசிய கூட்டணி.. தைரியம் இருந்தால் திமுக, அதிமுக, பாஜக மூவரும் ஒன்றாக வரலாமே? இந்த ஆட்சி கலையும் என்று பேசுவதா? : முதல்வர் விஜய்
4:03 PM, 25 Sep
என் தாயை தவறாக பேசியதை கூட பொறுத்துக் கொண்டேன். ஆனால் வீரமணி பாலியல் வழக்கு தொடர்பாக ஸ்டாலின் வாயை திறக்க வேண்டும். இதில் கூட அதிமுக வாய் திறக்கவில்லை. இதில் கூடவா கூட்டாக இருப்பீர்கள்.. சிறுமிகளின் வலியை கூட பேச முடியவில்லை என்றால், என்ன அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள். திமுக, அதிமுகவுக்கு மக்கள் புகட்டி ஆக வேண்டும்: விஜய்
Vijay in Madurantakam LIVE News in Tamil: Tamil Nadu CM Vijay campaign in Madurantakam for the by-election. Get the latest news, campaign updates, key developments, candidates, election date and constituency details in Tamil at Oneindia Tamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.