முதல்வரான பின், விஜய்யின் முதல் பிறந்தநாள்! வாசகர்கள் கமெண்ட் பண்ணுங்க
சென்னை: தமிழ் திரையுலகில் 90கள் முதல் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்ற விஜய், தற்போது அரசியல் களத்தில் தமிழகத்தின் 'முதலமைச்சராக' தனது 52-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
சினிமா உச்சத்தில் இருந்தபோதே அரசியலில் களம் இறங்கி, இன்று தமிழகத்தின் மிக முக்கிய பொறுப்பான முதல்வர் நாற்காலியை அலங்கரிக்கும் விஜய்க்கு, அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

விஜய்க்கு அரசியல் காலம் கனிந்துள்ள இந்த வேளையில், மக்கள் அவரிடம் நற்பரிபாலனத்தையும், புதிய மாற்றங்களையும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களாகிய நீங்கள் அவரிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
விஜய் முதல்வரான பிறகு கொண்டாடும் இந்த 52-வது பிறந்தநாளில், ஒன்இந்தியா தமிழ் வாசகர்களாகிய நீங்கள் அவரிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
வாழ்த்துகள்: ஒரு ரசிகனாக அல்லது தமிழக குடிமகனாக அவருக்கு நீங்கள் கூற விரும்பும் பிறந்தநாள் வாழ்த்து என்ன?
எதிர்பார்ப்புகள்: கல்வி, வேலைவாய்ப்பு, கட்டமைப்பு என தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் விஜய் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் விஷயம் எது?
கோரிக்கைகள்: உங்கள் பகுதி சார்ந்த அல்லது பொதுவான எந்தப் பிரச்சினைக்கு அவர் உடனடியாக தீர்வு காண வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
வாசகர்களே, உங்கள் குரலை பதிவு செய்யுங்கள்!
தமிழக முதல்வர் விஜய்யின் இந்த 52-வது பிறந்தநாளில், நீங்கள் அவருக்கு சொல்ல விரும்பும் வாழ்த்துகளையும், அவரிடம் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களையும் கீழே உள்ள கமெண்ட் (Comment) பகுதியில் நம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்! உங்கள் கருத்துக்கள் ஆரோக்கியமான மாற்றத்திற்கு வழிவகுக்கட்டும்!












Click it and Unblock the Notifications