தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி! அசைக்க முடியாத இடத்தில் கே.எஸ்.அழகிரி! பரிதவிக்கும் பிரமுகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரை மாற்றக்கோரி அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் பலமுறை டெல்லிக்கு படையெடுத்தும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் கே.எஸ்.அழகிரி.

இதற்கு காரணம் கே.எஸ்.அழகிரி தலைவரான பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் சந்தித்த எல்லா தேர்தல்களிலும் கிடைத்த வெற்றிதானாம்.

இதனால் தான் செண்டிமெண்டாக வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அவரையே தலைவர் பதவியில் வைத்திருப்பது என கட்சி மேலிடம் முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 தமிழக காங்கிரஸ்

தமிழக காங்கிரஸ்

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து கே.எஸ்.அழகிரியை மாற்றுவதற்கான முயற்சியில் ஒருவரல்ல இருவரல்ல பலரும் முயற்சித்தும் கூட, இன்னும் அசைக்க முடியாத இடத்தில் அமர்ந்து எதிர் தரப்பினரை தவிக்க வைக்கிறார். கார்த்தி சிதம்பரம், செல்வப்பெருந்தகை, ரூபி மனோகரன், விஜயதரணி என பலரும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை கைப்பற்ற காய் நகர்த்தி வரும் நிலையில் திருநாவுக்கரசர் மீண்டும் தலைவரக ஒரு ரவுண்டு வர விரும்புகிறாராம்.

பதவிக்காலம்

பதவிக்காலம்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கான பதவிக்காலம் முடிந்து ஓராண்டு ஆகியும் அந்தப் பதவியில் இன்னும் கே.எஸ்.அழகிரியே தொடர்ந்து வருகிறார். இதற்கு காரணம் அவர் மீது பெரியளவில் கூட்டணிக் கட்சியான திமுக அதிருப்தி தெரிவிக்காததும், காங்கிரஸ் சந்தித்த தேர்தல் அனைத்திலும் தொடர் வெற்றியை ஈட்டியதும் தான். அதுமட்டுமல்ல செண்டிமெண்டாகவும் நாடாளுமன்றத் தேர்தல் வரை கே.எஸ்.அழகிரியை தலைவராக வைத்திருக்க டெல்லி மேலிடம் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

டெல்லிக்கு படையெடுப்பு

டெல்லிக்கு படையெடுப்பு

இதனிடையே எப்பாடு பட்டேனும் கே.எஸ்.அழகிரியை தலைவர் பதவியிலிருந்து இறக்கியே ஆகவேண்டும் என ஒரு குரூப் கங்கணம் கட்டிக்கொண்டு களமாடி வருகிறது. இதனால் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் பரபரப்புக்கு பஞ்சாமில்லாமல் இருக்கிறது. இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை பெண் ஒருவருக்கு தான் தர வேண்டும் என விஜயதரணி எம்.எல்.ஏ. இப்போதே குரல் கொடுத்து வருகிறார்.

தேர்தல் பணிகள்

தேர்தல் பணிகள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளதால், இப்போதே தேர்தல் பணிகளை தொடங்க வேண்டிய அவசியம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. அதனால் தலைவர் மாற்றத்தை பொறுத்தவரை இப்போது எந்த முடிவையும் காங்கிரஸ் மேலிடம் எடுக்காது எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+