கே.வி.தங்கபாலு வீட்டில் நிகழ்ந்த சோகம்! ஆறுதலும் இரங்கலும் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவின் மாமனார் தசரதன் உடல் நலக்குறைவால் காலமானார்.
மாமனார் மறைவால் வருந்தி வாடும் கே.வி. தங்கபாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதலும் இரங்கலும் தெரிவித்துள்ளார். தங்கபாலுவை போலவே அவரது மாமனார் தசரதனும் காங்கிரஸ் முன்னணி தலைவராக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் பதிவு வருமாறு;
''தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு அவர்களின் மாமனாரும், காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான கே.தசரதன் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து வருந்தினேன்.
தசரதன் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications