தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இடையே கொரோனா புதிய உச்சம்... 20,768 பேர் பாதிப்பு - 153 பேர் பலி
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20ஆயிரத்தை தாண்டியுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவால் 20,768 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 153 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரே நாளில் 20,768 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு 153 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,20,444 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாக வீசத்தொடங்கியுள்ளது. தினசரியும் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து தினசரியும் சுகாதாரத் துறை வெளியிடுகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று 20,768 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12,07,112 பேர் பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்றைய தினம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நெருங்கிய நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12,07,112 ஆக அதிகரித்துள்ளது.

1,20,444 பேர் சிகிச்சை
இன்று ஒரே நாளில் 17,576 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இது வரை 10,72,322 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று 1,20,444 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா பரிசோதனை
இன்று ஒரே நாளில் 1,43,083 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 2,29,56,942 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொத்த பரிசோதனை
இன்று ஒரே நாளில் 1,37,224 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 2,25,61,835 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் 265 கொரோனா சோதனை மையங்கள் இயங்கி வருகின்றன.

153 பேர் மரணம்
இன்று கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 153 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இரண்டாவது நாளாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவிற்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 14,346 பேராக அதிகரித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications