சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் இன்று புதிதாக 5,447 பேருக்கு கொரோனா தொற்று...67 பேர் உயிரிழப்பு!!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இதுவரைக்கும் 77,25,962 பேருக்கும், இன்று மட்டும் 91,401 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை 6,35,855 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்னும் தமிழகத்தில் 45,135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று 5,524 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Nadu Corona updates: Covid 19 cases have increased today

தமிழகத்தில் இன்று மட்டும் 91,984 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 77,25,962 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் உயிரிழந்த 67 பேரில் 32 பேர் தனியார் மருத்துவமனையிலும், 35 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு 9,984 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று புதிதாக 1096 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இத்துடன் சென்னையில் 1,76,779 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இன்னும் சென்னையில் மட்டும் 13,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

என்னாச்சு இந்த டொனால்ட் டிரம்புக்கு.. கொரோனா வந்தும் அடங்கலையே.. தொடர்ந்து பொய் தகவலையே பரப்புறாரே!என்னாச்சு இந்த டொனால்ட் டிரம்புக்கு.. கொரோனா வந்தும் அடங்கலையே.. தொடர்ந்து பொய் தகவலையே பரப்புறாரே!

இன்று அதிகபட்சமாக சென்னையை அடுத்து கோவையில் 473 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் இந்த மாவட்டத்தில் 369 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். சேலத்தில் புதிதாக 322 பேருக்கு தொற்று ஏற்பட்டு, இன்று மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 515 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 45,279 பேர் நேற்று சிகிச்சை பெற்று வந்தனர். இன்று இந்த எண்ணிக்கை 45,135 ஆக குறைந்துள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

English summary
Tamil Nadu Corona updates: Covid 19 cases have increased today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X