என்னாச்சு.. தமிழகத்தில் மீண்டும் 5,000-ஐ நெருங்கும் கொரோனா.. இந்த 7 மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகம்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிவேமாக அதிகரித்து வருகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 5,000-ஐ நெருங்கியுள்ளது. சென்னையில் கொரோனா பரவல் வேகம் தொடர்ந்து இரட்டிப்பாகி வருகிறது. இங்கு 2,481 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. இதனால் அரசும், மக்களும் நிம்மதியாக இருந்த நிலையில் ஓமிக்ரான் வைரஸ் புகுந்த நேரத்தில் இருந்து தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
இதனால் மொத்த பாதிப்பு 27,60,449 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பும் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் 3 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 36,814 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 688 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 27,07,058 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் மிக மிக குறைவாக இருக்கிறது.

சென்னை நிலை மிக மோசம்
16,577 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 1,17,382 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,70,33,924 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 2481 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாபாதிப்பு இரட்டிப்பாகி வருகிறது.

இந்த 7 மாவட்டங்கள்
செங்கல்பட்டில் 596 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 259 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 127 பேருக்கும், மதுரையில் 52 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 97 பேருக்கும், திருவள்ளூரில் 209 பேருக்கும், திருச்சியில் 51 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 80 பேருக்கும், ஈரோட்டில் 43 பேருக்கும், சேலத்தில் 75 பேருக்கும், நாமக்கல்லில் 33 பேருக்கும், தஞ்சாவூரில் 26 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளுர், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களின் நிலை மிக மிக மோசமாக உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications