கொரோனாவால் இன்று 8 பேர் மரணம்.. எல்லாம் சென்னையில் தான்.. இறப்பின் அதிர வைக்கும் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள கொரோனா வைரஸ் குறித்த முழு அறிவிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இத்துடன் கொரோனா தொற்று பிரச்சனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்த 8 பேரின் விவரம் எப்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். எப்போது உயிரிழந்தார்கள். எப்படி உயிரிநதார்கள் என்பது குறித்த விவரத்தை தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 104 வது நபராக 50 வயதாகும் ஆண் ஒருவர் செங்கல்பட்டில் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இவருக்கு கொரோனாவுடன் சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, கரோனரி தமனி நோய் மற்றும் பெருமூளையில் ஏற்பட்டிருந்த பழைய பாதிப்பு உள்ளிட்டவை இருந்திருக்கிறது. இவர் கடந்த 21ம் தேதி தனியர் மருத்துவமனையில் இருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையிக்கு உடல் நிலை மோசமடைந் தநிலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் 22ம் தேதி இரவு 7 மணி அளவில் கிட்னி செயல் இழப்பால் உயிரிழந்தார்.

உயிரிழந்த 105ஆவது நபர்

உயிரிழந்த 105ஆவது நபர்

தமிழகத்தில் 105ஆவது நபராக உயிரிழந்தவர் வயது 65 ஆண். இவர் திருவள்ளூரைச் சேர்ந்தவர். இவருக்கும் கிட்னி பிரச்சனை, ரத்த அழுத்தம், நீரழிவு நோய் இருந்தது. தனியார் மருத்துவமனையில் இருந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட இவர் 22ம் தேதி இரவு 8 மணிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உயிரிழந்தார். 106வது நபராக தமிழகத்தில் இறந்தவரின் வயது 62 வயது ஆண். சென்னையை சேர்ந்த இவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 23ம் தேதி காலை 8.55 மணிக்கு சுவாச பிரச்சனையால் உயிரிழந்தார். இவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருந்தது.

மூச்சுவிடுவதில் சிரமம்

மூச்சுவிடுவதில் சிரமம்

107வது நபராக தமிழகத்தில் உயிரிழந்த 52 வயது ஆண் சென்னையை சேர்ந்தவர். இவருக்கு ரத்த அழுத்த பிரச்சனை இருந்தது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், 23ம் தேதி பிற்பகல் 2.30 மணி அளவில் உயிரிழந்தார். இவர் உயர் இரத்த அழுத்தம், மூச்சுத்திணறல் / வைரல் நிமோனியா போன்ற காரணத்தால் இறந்தார்.

எப்படி இறந்தார்

எப்படி இறந்தார்

108வது நபராக தமிழகத்தில் உயிரிழந்தது 60வயது பெண். சென்னையைச் சேர்ந்தவர் ஆவர். இவர் கடந்த 22ம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். 23ம் தேதி மாலை 3 மணிக்கு உயிரிழந்தார், நீரிழிவு நோய் / நுரையீரல் அழற்சி போன்ற காரணத்தால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 109வது நபராக இறந்தவர் 46 வயது ஆண். இவர் சென்னையைச் சேர்ந்தவர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 20ம்தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் 23ம்தேதி உயிரிழந்தார். இவர் கொரோனாவால் சுவாச பிரச்சனை, நிமோனியா ஏற்பட்டு உயிரிழந்தார்.

சுவாசப்பிரச்னையால் பலி

சுவாசப்பிரச்னையால் பலி

110வது நபராக உயிரிழந்தவர் வயது 68 ஆண். சென்னையில் தனியார் மருத்துவமனையில் கடந்த 19ம் தேதி கொரோனா பாதிப்புடன் மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சனையால் அனுமதிக்கப்பட்டார். இவர் கடந்த 21ம் தேதி மாலை 3.10 மணிக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு இறந்தார். 111வது நபராக உயிரிழந்தவர் 57 வயது ஆண். சென்னையைச் சேர்ந்த இவர் தனியார் மருத்துவமனையில் நீரழிவு பிரச்னையுடன், காய்ச்சல் மற்றும் மூக்சுவிடுதில் சிரமம் ஆகிய காரணங்களால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 21 தேதி இரவு 7.40 மணிக்கு உயிரிழந்தார். இவர் இறப்புக்கு சுவாசிப்பதில் ஏற்பட்ட தோல்வி காரணம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+