தமிழகத்தில் இன்று 64 பேருக்கு கொரோனா.. மொத்தம் 1885 ஆக உயர்வு.. அதிர வைத்த சென்னை, மதுரை!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் 64 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மார்ச் 25 ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளது. எனினும் ஊரடங்கு உத்தரவால் கொரோனா பரவல் வேகம் தடுக்கப்பட்டுள்ள போதிலும், கொரோனா பரவுவது குறையவில்லை.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தினமும் சராசரியாக 50க்கும் அதிகமானோருக்கு ஏற்பட்டு வருகிறது. இன்று ஒரு நாளில் மட்டும் 64 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது.

எங்கு எத்தனை
தமிழகத்திலேயே இன்று அதிகபட்சமாக சென்னையில் 28 பேருக்கும்,. மதுரையில் 15 பேருக்கும். விருதுநகரில் 7 பேருக்கும், நாமக்கல் மற்றும் விழுப்புரத்தில் தலா நான்கு பேருக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பூரில் இரண்டு பேருக்கும், திருவள்ளூர், ராமநாதபுரம்,. சிவகங்கை, சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

சிவப்பு மண்டலங்கள்
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 15 நோயாளிகளுக்குள் உள்ள பகுதிகள் ஆரஞ்சு மண்டலம் என மத்திய அரசு வகைப்படுத்தி உள்ளது. அந்த லிஸ்டில் தற்போது சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி ஆகியவை உள்ளன. பெரம்பலூரில் 7 பேருக்கே கொரோனா இருந்த போதிலும் வேகமாக அதிகரிப்பால் சிவப்பு மண்டலமாக உள்ளது. இதேபோல் 8 மாவட்டங்களை தவிரி அனைத்து மாவட்டங்களும் கொரோனா வைரஸ் அதிகம் பரவக்கூடிய சிவப்பு மண்டலமாகவே தமிழகத்தில் உள்ளன.

எங்கு அதிகம் பேர் குணம்
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 60 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரு நாளில் செங்கல்பட்டு மருத்துவமனையில் 13 பேரும், திருவாரூரில் 12 பேரும், தஞ்சையில் 10 பேரும், சென்னையில் 9 பேரும், மதுரையில் 8 பேரும், கன்னியாகுமரியில் 2 பேரும் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்திலேயே இதுவரை அதிகபட்சமாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் 185 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளன.அதற்கு அடுத்தபடியா கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 144 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

நோய் தொற்று எத்தனை பேருக்கு
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 6621 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 79586 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. அதில் 1855 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 87605 ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 7485 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இன்று 39 ஆண்களுக்கும, 25 பெண்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலையில் 838 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றவர்கள் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டார்கள்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications