தமிழ்நாடு நாள் இன்று! 76 நாட்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த சுந்தரலிங்கனார் கனவை நனவாக்கிய அண்ணா
சென்னை: மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்ட அன்னைத் தமிழ் பூமிக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாதுரை 'தமிழ்நாடு' எனப் பெயரிட்ட ஜூலை 18 ஆம் தேதி, இன்று தமிழ்நாடு நாளாகக் (Tamilnadu day) கொண்டாடப்படுகிறது.

திமுக ஐடி விங் கொண்டாட்டம்
இதுகுறித்து திமுக ஐடி விங் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "#தமிழ்நாடு_நாள்" என்று குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளது. "தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் பகுதிகள் இணைந்திருந்தபோது 'சென்னை மாகாணம்' என்ற பெயர் இருந்தது. ஆனால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகும் 'சென்னை மாகாணம்' என்ற பெயர் மாற்றப்படாமல் இருந்தது. 'தமிழ்நாடு' என்ற பெயர் சூட்டவேண்டும் என்று சுதந்திரப் போராட்ட தியாகி சுந்தரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். தந்தை பெரியாரும் 'தமிழ்நாடு' பெயர் சூட்ட தொடர்ந்து வலியுறுத்தினார்," என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "பேரறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு 1967, ஜூலை 18 அன்று தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார். நம்முடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நெடுங்காலத்திற்குப் பிறகும் தம்முடைய இல்லங்களிலே அமர்ந்து பேசிக் கொள்ளுகின்ற நேரத்தில், பெருமையோடு சொல்லிக் கொள்ள இருக்கிறார்கள்.
'என்னுடைய பாட்டனார் காலத்திலேதான் நம்முடைய நாட்டுக்கு 'தமிழ்நாடு' என்ற பெயர் இடப்பட்டது' என்பதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர் அண்ணா, 'சட்டமன்றத் தலைவர் அவர்களே, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கின்ற இந்த நன்னாளில் 'தமிழ்நாடு' என்று நான் சொன்னதும் 'வாழ்க' என்று அவை உறுப்பினர்கள் சொல்லுவதற்குத் தங்களுடைய அனுமதியைக் கோருகிறேன்' என்று சொல்லி 'தமிழ்நாடு' என்று முழங்க, உறுப்பினர்கள் 'வாழ்க' என்று வாழ்த்து முழக்கம் எழுப்பினார்கள். நாமும் சொல்வோம் தமிழ்நாடு வாழ்க!" என்று திமுக ஐடி விங் தனது பதிவில் தெரிவித்துள்ளது.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் வாழ்த்து
இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது 'எக்ஸ்' (X) வலைத்தளப் பக்கத்தில், "பிள்ளை தாய்க்குப் பெயர் 'பெற்றுக் கொடுத்த' வரலாறு... வேறு எந்த இயக்கத்திற்கும் இல்லாத மகத்தான வரலாறு, திமுக தமிழ்நாடு நாள்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
வரலாறு ஓர் பார்வை
சென்னை மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயரிடக் கோரி, சுந்தரலிங்கனார் என்ற தியாகி 76 நாட்கள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர் நீத்தார். பின்னர், 2021 இல் புதிதாகப் பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஜூலை 18 அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவித்தது. சென்னை மாநிலத்தில் திமுக ஆட்சிக்கு வந்து, அறிஞர் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, 1968 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று சென்னை மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு எனப் பெயர் மாற்ற சென்னை மாநில சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி தைப்பொங்கல் அன்று 'தமிழ்நாடு' என்ற பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
-
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications