சனாதன எதிர்ப்புக்காக சாமியாரை அழைத்து பரிகாரமா? வாடகை வாய்களின் வதந்தி- உதயநிதி ஆவேசம்
சென்னை: சனாதன எதிர்ப்புப் பேச்சுக்காக சாமியார் ஒருவரை அழைத்து பரிகாரம் செய்ததாக அதிமுகவின் வாடகை வாய்கள் வதந்தி பரப்புகின்றனர்; என் தலையை சீவுவோம் என்று சொன்ன போதும், நான் கருணாநிதியின் பேரன் ; இதற்கெல்லாம் அஞ்சமாட்டேன் என்று பேசியது நான்தான் என்று தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: மதங்கள் அனைத்தும் அன்பைத்தான் போதிக்கின்றன. மதத்தை வைத்து அரசியல் செய்வோர்தான் வெறுப்பை பரப்புகிறார்கள். சங்கிகள் மட்டுமல்லாது அவர்களின் ஸ்லீப்பர் செல்கள் கூட வெறுப்பை பரப்புகின்றனர்.

அலகாபாத் நீதிபதி ஒருவர் இஸ்லாமியருக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்தார். இதற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓராணியில் ஒன்று திரண்டன.. ஆனால் அண்ணா திமுக இதில் இணையவில்லை.
நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கரை இழிவாக பேசினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதனால் அமித்ஷாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.. திமுக செயற்குழு கூட்டத்தில் அமித்ஷாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் அண்ணா திமுக மவுனமாக இருக்கிறது. மாநில சுயாட்சியை கொண்டு வந்த பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி வைத்துள்ள அதிமுக மாநில உரிமைகளை பறிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரிக்கிறது.
புயல் நிவாரண நிதியை வழங்காக மத்திய அரசைக் கண்டித்து குரல் கொடுக்காத அதிமுக, சிறுபான்மை மக்கள் தாக்கப்படும் போதும் குரல் கொடுக்காத அதிமுக, திமுக அரசு மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் சொல்ல முடியவில்லை என்பதால்தான் வதந்திகளை பரப்பி வருகின்றன. சனாதனம் குறித்து நான் பேசியதால் ஏதோ ஒரு சாமியாரை அழைத்து பரிகாரம் செய்ததாக ஒரு வதந்தியை கிளப்பி வருகின்றனர். நான் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், என் தலையை வெட்டுவேன் என்று ஒரு சாமியார் சொன்னார். நான் கருணாநிதியின் பேரன், நான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? என கூறினேன். வாயை வாடகைக்கு விடும் வகையில் திமுக மீதும் என் மீதும் அதிமுகவினர் வதந்திகளை பரப்புகின்றனர். இவ்வாறு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications