ஸ்டாலினின் ஒப்புதல்? தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பா? இந்த துறைக்கு தலைவரா? சூப்பர்ல
சென்னை: தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் இம்மாதம் இறுதியுடன் ஓய்வு பெறும் நிலையில் அவருக்கு புதிய பதவி காத்திருப்பதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய பதவி குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றன.. சங்கர் ஜிவால் ஏற்கப்போகும் பதவி என்ன? எப்போது பதவி ஏற்கக்கூடும்? என்பது போன்ற சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கடந்த, 2023 ஜூன் மாதம், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார். இவர் வருகிற ஆகஸ்ட் 31ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளார்.

இதனால், புதிய டிஜிபியை நியமனம் செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், சங்கர் ஜிவாலுக்கு 6 மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதில் உண்மை இல்லை என்று , சங்கர் ஜிவால் தரப்பில் உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
ஓய்வு பெறும் சங்கர் ஜிவால்
இந்நிலையில், இந்த மாத இறுதியுடன் ஓய்வுபெறும் சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, தீயணைப்பு ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இந்த ஆணையத்தின் தலைவராக சங்கர் ஜிவாலை நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதற்கான ஆவணங்களில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளாராம்.. எனினும், டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அரசுத் துறையில் ஆலோசகராகவோ அல்லது அரசுத்துறையின் ஆணையராகவோ பொறுப்பு வழங்கப்படலாம் என்று பேசப்பட்டு வந்தது.. இதில், தமிழக காவல் துறையின் ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்றே பலரும் கூறிவந்தனர்.
புதிய பதவி எப்போது
இந்நிலையில், தமிழக அரசு, தீயணைப்பு துறையில் சீர்திருத்த பணிகளை மேற்கொள்ள உள்ளது. அதற்காக தீயணைப்பு துறை ஆணையம் ஒன்றை உருவாக்க உள்ளது. இதற்கான பணிகளும் நடந்து வருகின்றன என, கோட்டை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன் தலைவராக, சங்கர் ஜிவால் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. விரைவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், டிஜிபி சங்கர்
ஜிவால் புதிதாக உருவாக்கப்பட உள்ள தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த பொறுப்பில் அவர் 2 ஆண்டுகள் நீடிப்பார் என்றும் தெரிகிறது.
யார் இந்த சங்கர் ஜிவால்?
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சங்கர் ஜிவால் பட்டப்படிப்பை டெல்லியில் முடித்துவிட்டு, கடந்த 1990ல் UPSC தேர்வில் வெற்றி பெற்று தமிழகப் பிரிவு IPS அதிகாரியாக பணியில் சேர்ந்தார்... பிறகு 1993ல் மன்னார்குடியில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முக்கிய பொறுப்புகளில் பணி புரிந்துள்ளார்.
கடந்த 2006ல் திமுக ஆட்சியில் தமிழக உளவுத்துறை ஐசியாக சங்கர் ஜிவால் பணிபுரிந்துள்ளார். இதையடுத்து, சென்னை மாநகர காவல் காவல் ஆணையராக பொறுப்பு வைத்து வந்த சங்கர் ஜிவால் அப்போதைய டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபுவின் ஓய்வுக்கு பிறகு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் பணி அமர்த்தப்பட்டார்.
கடந்த 2021ல் டிஜிபியாக இருந்த சுனில் குமார் ஓய்வு பெற்றதையடுத்து, தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். இதே போல, கடந்த 2023ல் ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் ஓய்வு பெற்றதையடுத்து, தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
உள் துறை செயலாளராக இருந்த SK பிரபாகருக்கு TNPSC தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதுபோலவே, தற்போதைய தமிழக டிஜிபியாக இருந்து ஓய்வு பெற உள்ள சங்கர் ஜிவாலுக்கு தீயணைப்பு ஆணையத்தின் தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாம்..
வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ளார்.. எனவே அதற்கு முன்னதாகவே சங்கர் ஜிவாலை புதிய பதவியில் அமர்த்துவார் என்கிறார்கள்.
அடுத்த புதிய டிஜிபி யார்
இதனிடையே, தமிழகத்தின் புதிய டிஜிபி யார் என்று தெரியவில்லை.. டிஜிபியாக யாரை நியமிக்கலாம் என்ற லிஸ்ட்டை 3 மாதங்களுக்கு முன்பே மாநில அரசுகள், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும். இந்த லிஸ்ட்டை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பரிசீலனை செய்யும். இதன் அடிப்படையில் புதிய டிஜிபிக்களாக 3 பேரை மத்திய அரசு பரிந்துரைக்கும். அதில் ஒருவர் புதிய டிஜிபி அறிவிக்கப்படுவார்.
அந்தவகையில் தமிழக அரசு சமீபத்தில் இந்த லிஸ்ட்டை அனுப்பி வைத்தது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து பரிந்துரை பட்டியல் இன்னமும் தமிழக அரசுக்கு வரவில்லை.,.. தமிழ்நாட்டில் புதிய டிஜிபி நியமனத்தில் தாமதம் ஏற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.. இது தொடர்பாக ஏற்கனவே கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு டிஸ்மிஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications