எல்லா மாவட்டத்திலும் கிடுகிடு.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 13 மாவட்டங்கள்.. ஷாக் லிஸ்ட்
செனனை : தமிழகத்தில் உள்ள 37 மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி, தேனி, தூத்துக்குடி, செங்கல்பட்டு உள்பட 13 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு இன்று தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருகிறது.ஆனால் உயிரிழப்பை தடுக்கவும், விரைவாக மக்களை காக்கவும் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தற்போதைய நிலையில் தென்மாவட்டங்களில் பாதிப்பு மிக மோசமாகி வருகிறது. எனவே அங்கு வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
சென்னையில் இன்று ஒரே நாளில் புதிதாக 1205 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,969 ஆக உயர்ந்துள்ளது
செங்கல்பட்டில் 242 பேர், திருவள்ளூரில் 219 பேர், தூத்துக்குடியில் 195 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சதம் அடித்த மாவட்டங்கள்
மதுரையில் 192 பேர், வேலூரில் 140 பேர், விருதுநகரில் 143 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் 145 பேர், சேலத்தில் 127 பேர், திருச்சியில் 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், தேனியில் 108 பேர், திருவண்ணாமலையில் 103 பேர், கன்னியாகுமரியில் 105 பேரும், ஈரோட்டில் 15 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் 82 பேரும், கோவையில் 43 பேரும், காஞ்சிபுரத்தில் 63 பேரும், ராமநாதபுரத்தில் 85 பேரும், புதுக்கோட்டையில் 36 பேரும், திருப்பத்தூரில் 31 பேரும், திருவாரூரில் 27 பேரும், விழுப்புரத்தில் 41 பேரும், திருப்பூரில் 24 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்காசியில் 9 பேரும், கடலூரில் 13 பேரும், தர்மபுரியில் 15 பேரும், ராணிப்பேட்டையில் 13 பேரும், தென்காசியில் 9 பேரும், திண்டுக்கல்லில் 8 பேரும், அரியலூரில் 5 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரூரில் 5 பேரும், கிருஷ்ணகிரியில் 2 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்,.

கொரோனா நிலவரம்
தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்ற விவரத்தை இப்போது பார்ப்போம்.
- அரியலூர் 497
- செங்கல்பட்டு 7635
- சென்னை 74969
- கோவை 1071
- கடலூர் 1493
- தர்மபுரி 224
- திண்டுக்கல் 750
- ஈரோடு 327
- கள்ளக்குறிச்சி 1621
- காஞ்சிபுரம் 3099
- கன்னியாகுமரி 1070
- கரூர் 190
- கிருஷ்ணகிரி 225
- மதுரை 5482
- நாகப்பட்டினம் 347
- நாமக்கல் 150
- நீலகிரி 181
- பெரம்பலூர் 172
- புதுக்கோட்டை 534
- ராமநாதபுரம் 1691
- ராணிப்பேட்டை 1415
- சேலம் 1630
- சிவகங்கை 720
- தென்காசி 598
- தஞ்சாவூர் 625
- தேனி 1495
- திருப்பத்தூர் 379
- திருவள்ளூர் 6075
- திருவண்ணாமலை 2861
- திருவாரூர் 681
- தூத்துக்குடி 1949
- திருநெல்வேலி 1551
- திருப்பூர் 288
- திருச்சி 1273
- வேலூர் 2486
- விழுப்புரம் 1411
- விருதுநகர் 1738
- விமான நிலைய கண்காணிப்பில் 534
- விமான நிலைய கண்காணிப்பில் 402
- ரயில் நிலைய கண்காணிப்பில்: 432
(வெளிநாடு)
(உள்நாடு)

குறையும் பாதிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 3680 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அதைவிட அதிகமாக இன்று ஒரே நாளில் 4163 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 82324 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் 46105 பேர் மட்டுமே ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
-
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!












Click it and Unblock the Notifications